இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 3 டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் இரு டி20 யிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியானது ஹெமின்டன் செடன் பூங்கா மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 ற்கு தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் சகால்-ற்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்கினார். நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குஸனுக்கு பதிலாக பிளார் டிக்கர் களமிறங்கினார். டிம் செய்ஃபெர்ட் மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். முதல் பவர் பிளே-வில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்தது. 7.4வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் டிம் செய்ஃபெர்ட தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 25 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களை அடித்தார்.
![Colin munro](https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/3b993-15497985355286-800.jpg 1920w)
10.1 வது ஓவரில் காலின் முன்ரோ சிக்ஸ் அடித்து தனது அரை சதத்தை அடித்தார். அதிரடியாக விளையாடிய காலின் முன்ரோ 13.2 வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் ஹர்திக் பாண்டியா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 40 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்களை அடித்தார். 14.4வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் 27 ரன்களில் குல்தீப் யாதவ்-விடம் கேட்ச் ஆனார்.
![Kuldeep yadhav](https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/d5801-15497986432264-800.jpg 1920w)
அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த காலின் டி கிரான்ட் ஹாம் 18.2வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 30 ரன்களை அடித்தார்.
![Stupid](https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/e78d3-15497985654955-800.jpg 1920w)
நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் , புவனேஸ்வர் குமார் , கலீல் அகமது தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
213 என்ற இலக்குடன் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். மிட்செல் சான்ட்னர் முதல் ஓவரை வீசினார். சான்டனர் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் தவான் 5 ரன்களில் டார்ல் மிட்செல்-டம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் ரோகித் சர்மா உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். இந்திய அணி முதல் பவர் பிளே-வில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்திருந்தது.
![Vijay Shankar](https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/56536-15497986627817-800.jpg 1920w)
சிறப்பாக விளையாடி வந்த விஜய் சங்கர் 8.3வது ஓவரில் சான்டனர் வீசிய பந்தில் காலின் டி கிரான்ட் ஹாம்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் ஃபன்ட் அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர் எதிர்கொண்ட முதல் 6 பந்திலேயே 23 ரன்களை அடித்தார். 12.2 வது ஓவரில் பிளார் டிக்கர் வீசிய பந்தில் அதிரடி வீரர் ரிஷப் ஃபன்ட் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 12 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை அடித்தார்.
![Mitchell darl](https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/f47b7-15497986943078-800.jpg 1920w)
13.6வது ஓவரில் டார்ல மிட்செல் வீசிய பந்தில் ரோகித் சர்மா , டிம் செய்ஃபெர்டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை அடித்தார். 14.5வது ஓவரில் குஜ்லெஜின் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியா , கேன் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 11 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களை அடித்தார்.
![Newzeland won by 4 runs](https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/02/2ef4d-15497987248858-800.jpg 1920w)
15.2 வது ஓவரில் டார்ல் மிட்செல் வீசிய பந்தில் தோனி 2 ரன்களில் டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய க்ருநால் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் டிம் சௌதியின் சிறப்பான பந்துவீச்சாள் கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்களை எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தினேஷ் கார்த்திக் 32 ரன்களுடனும் மற்றும் க்ருநால் பாண்டியா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருதினை காலின் முன்ரோ வென்றார்.
தொடர் ஆட்டநாயகன் விருதினை டிம் செய்பெர்ட் பெற்றார்.