கதை என்ன ?
CoA உறுப்பினர் ஒருவர் "முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை குளோபல் டி 20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்ட முடிவு இதுவே கடைசியாக இருக்கும் என்றும் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் எதிர்காலத்தில் வழங்கப்படாது" என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால் …
கனடாவின் குளோபல் டி 20 லீக்கில் விளையாட பி.சி.சி.ஐ யுவராஜ் சிங்குக்கு நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்கியது. இது இந்திய கிரிக்கெட் சுற்றுவட்டத்தின் எல்லைகளில் நிறைய வீரர்கள் மற்றும் சமீபத்தில் இந்தியாவுக்காக இடம்பெறாதவர் இதை சிறந்த வாய்ப்பாக கருதப்பட்டனர். மேலும் அதிகமான இந்திய வீரர்கள் இப்போது வெளிநாட்டு டி 20 லீக்கில் இடம்பெறுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றனர்.
பி.சி.சி.ஐ இந்திய வீரர்கள் வெளியூர் டி 20 லீக்கில் விளையாடுவதை மறுக்கும் கடுமையான கொள்கையைக் தற்போது மேற்க்கொண்டுள்ளது. இருப்பினும், இந்திய ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் சிறப்பு நிபந்தனைகளின் கீழ் ஒப்புதல் பெற்றார் என்பது தெறியவந்துள்ளது.
கதைக்கரு :
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யூவராஜ் சிங் இந்தியா உலகக்கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் இவர் கடந்த 2019ம் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் யுவராஜ் சிங் அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதையடுத்து குளோபல் டி 20 லீக்கில் விளையாட ஒப்பந்தமாகி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் CoA உறுப்பினர் ஒருவர் இதுக்குறித்து கூறுகையில் "கனடாவின் குளோபல் டி 20 லீக்கில் விளையாட பி.சி.சி.ஐ யுவராஜ் சிங்குக்கு நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்கியதே இறுதியாக கருதப்படுகிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் விரர்கள் வெளியூர் டி20 தொடரில் விளையாடுவதற்கு இனிமேல் நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளார். நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம், ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று உணர்ந்தோம்" என்பதாக அறிவித்தார்.
பி.சி.சி.ஐ அதிகாரிகள் இந்த நடவடிக்கையால் ஆச்சரியப்பட்டனர், ஏனெனில் இன்னும் நிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். குழுவில் உள்ள ஒரு அதிகாரி ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் தற்போதைய நிர்வாகத்தில் எந்தொரு நிலைத்தன்மையும் இல்லை என்று கூறியுள்ளார். மற்றொரு பி.சி.சி.ஐ அதிகாரி இந்த விஷயத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதோடு ஓய்வு பெற்ற வீரர்களை டி 20 லீக்கில் விளையாட சில நாடு அனுமதித்தால், அது ஒரு ஐ.சி.சி பிரச்சினையாக கருதப்படுகிறது என்றனர். ஆனால் யூவராஜ் சிங் சிறப்பு சிறப்பு நிபந்தனைகள் கீழ் அனுமதி பெற்றார் என்பது பல சர்ச்சைக்கு உள்ளாகியது.
அடுத்து என்ன ?
நிறைய இந்திய வீரர்கள் யுவராஜ் எடுத்த பாதையை பின்பற்றி வெளிநாட்டு டி 20 லீக்குகளில் பங்கேற்க விரும்புவதால் அடுத்து என்ன நடக்கிறது என்பது புதிராக இருக்கும்.