தோனியின் ஓய்வு குறித்து யாரும் கருத்து தெரிவிக்க கூடாது - ஷஹித் அப்ரிடி

MSD & Afridi
MSD & Afridi

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷஹித் அப்ரிடி , 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 2019 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க வேண்டும் என தனது ஆதரவையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் "டைம்ஸ் நவ்" பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், தோனியின் ஓய்வினை பற்றி யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என தனது கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

"தோனி இந்திய அணிக்கு ஆற்றிய மகத்தான சாதனைகளை வேறு யாரும் இந்திய அணிக்கு செய்திருக்க முடியாது.அவர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும் என யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. 2019 ஆண்டின் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது" என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷஹித் அப்ரிடி "டைம்ஸ் நவ் "பத்திரிக்கை பேட்டியளித்துள்ளார் .

சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஆணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபண்ட் டிற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய டி20 அணியிலிருந்து தோனிக்கு பிசிசிஐ ஓய்வளித்தது. பிசிசிஐ ன் இந்த முடிவுக்கு காரணம் 2018 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் தோனியின் பேட்டிங்கில் ரன்கள் அவ்வளவாக இல்லை என்பதும் ஒரு காரணமாகும்.

தோனிக்கு உலகெங்கிலும் தனியாக ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிசிசிஐ சர்வதேச டி20 அணியிலிருந்து தோனிக்கு ஓய்வளித்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அத்துடன் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் , சுனில் கவாஸ்கர் போன்றோரும் தோனியை தற்சமயம் டி20 அணியிலிருந்து நீக்கியதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் வரிசையில் தற்போது ஷஹித் அப்ரிடியும் தோனிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

தோனி இந்திய அணியில் ஒரு முக்கியமான வீரர் . 2019 உலகக் கோப்பையின் இந்திய அணியில் அவருடைய பெயர் கண்டிப்பாக இடம்பெற்றிருத்தல் அவசியமானதாகும். தோனியின் கிரிக்கெட் வாழ்வில் அவர் இந்திய அணிக்கு ஆற்றிய சிறப்பான பணிகளை வேறு எந்த வீரராலும் இந்திய அணிக்கு செய்திருக்க முடியாது என்றே கூற வேண்டும்.

கடினமான சமயங்களில் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் மிகச்சிறப்பாக அமையும். தோனியின் இந்த தனிச்சிறப்பு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களாலும் , ரசிகர்களாலும் அதிகம் போற்றப்படுகிறது.

ஷஹித் அப்ரிடியின் தோனிக்கு ஆதராவன இந்த குரல், இரண்டு நாடுகள் பகைமையினால் பிரிக்கபட்டிருந்தாலும் , கிரிக்கெட்டால் நாங்கள் ஒன்றினைந்து உள்ளோம் என நமக்கு எடுத்துரைக்கிறது.

ஷஹித் அப்ரிடி ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். கேப்டனாக பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் டி10 தொடரின் இரண்டாவது சீசனில் பக்துன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

Quick Links