ராகுல் ஓர் திறமையான வீரர் என அனைவரும் அறிவர். தற்போது இந்திய அணிக்கு நான்காம் இடத்தில் விளையாடவிருக்கும் வீரர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு கே எல் ராகுலும் ஓர் சிறந்த முறையில் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடி வரும் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்று பலரும் கேள்விகள் எழுப்பிவந்தனர். எனினும் அதை பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் மும்பை அணிக்கு எதிரான மூன்றாம் போட்டியில் 57 பந்துகளில் 71 ரன்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்தார்.
கடந்த வாரம் IANS-சிற்கு பேட்டி அளித்த போது ராகுல் கூறியதாவது, "ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாதது கவலை அளிக்க போவதில்லை. மறுபடியும் ஃபார்மிற்கு திரும்ப ஓர் போட்டி போதுமானது." என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது "மிக முக்கியமாக நான் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை பற்றி கவலைப்படுவதில்லை. அது என் சிந்தனைகளை திசை திருப்ப கூடாது."
"ஓர் வீரராக அனைவரும் தங்களது ஐபிஎல் அணிகளுக்காக சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். அதைத்தான் தற்போது நான் செய்து வருகிறேன். உலகக்கோப்பையில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பு வந்தால் உங்கள் மீது அதிகளவில் நெருக்கடிகள் ஏற்படும். ஆகையால் அதை பற்றி நான் பெரிதாக சிந்திப்பதில்லை. மேலும் இதில் சிறப்பாக செயல்பட்டால் உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போதைய நிலையில் நான் கிங்ஸ் லெவன் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும்."
"முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத காரணத்தினால் அதிகளவில் சர்ச்சைகள் எழுந்தது. வெளியே மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துகளை நான் படிப்பதே இல்லை. ஐபிஎல் அதிக போட்டிகள் கொண்ட ஓர் தொடர். இதில் ஃபார்மிற்கு திரும்ப விடாமுயற்சி செய்து ஓர் சிறந்த இன்னிங்ஸ் விளையாடுவது போதுமானது." என்றுக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் "மேலும் ராகுல் ஓரே விதமான ஷாட்களை பல முறை விளையாட முயற்சி செய்து ஆட்டமிழக்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. ஓர் முதல்வவரிசை பேட்ஸ்மேன் டி20 போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவது அவசியம்."
"முதல் 6 ஓவர்களில் முடிந்த வரை அதிக அளவில் ரன்களை குவிக்க வேண்டியது மிக அவசியம். அதில் சில சமயம் தவறான ஷாட்கள் அடிப்பதன் மூலம் ஆட்டமிழப்பது அவ்வப்போது நடக்கும். இதனால் துவண்டு விட கூடாது நாம் செய்யும் தவறுகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
கீப்பிங் செய்வது குறித்து கேட்டபோது, "இது ஓர் அணியாக சேர்த்து விளையாடும் விளையாட்டு நான் பௌலிங் செய்வதில்லை ஆகையால் விக்கெட் கீப்பிங் செய்து அணிக்கு உதவுகிறேன். கடந்த வருடம் பஞ்சாப் அணிக்கும் அதற்கு முன்னர் பெங்களூர் அணிக்கும் கீப்பிங் செய்தேன். டி20 போட்டிகளில் இதை நான் விரும்பி செய்து வருகிறேன்."
"எங்கள் அணியின் கேப்டன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தது தலைப்பு செய்தி ஆனது. அவர் மீது அதிகளவில் சர்ச்சைகளையும் எழுப்பியது. இதை பற்றியும் நாங்கள் அதிகளவில் கண்டுகொள்ளவில்லை. ஓர் புது அணியாக நாங்கள் பல விஷயங்களை கற்றுக்கொண்டு தொடரில் வெற்றி பெற வேண்டும்."
கெய்லை பற்றி அவர் கூறியதாவது "மற்றும் எங்கள் அணியின் தூணாக விளங்கி வரும் கிறிஸ் கெய்ல். 39 வயதிலும் இவர் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மூத்த வீரரும் ஆவார். ஆனால் எனக்கும் எங்களது அணி வீரர்களுக்கும் கெய்ல் ஓர் இளம் வீரர். இவர் எங்கள் அணியில் இருப்பது மிகவும் புத்துணர்வு அளிக்கும். இவர் இளம் வீரர்கள் உடன் சேர்ந்து விளையாடுவதால் அவர்களும் பயன் அடைகின்றனர். இவரது அனுபவமும் எங்கள் அணிக்கு அதிகம் உதவுகிறது. யாரும் இவருக்கு 40 வயது என்று எண்ணுவதில்லை. மனதால் இன்றும் இவர் இளைஞர் தான். இன்றளவிலும் அவரது பேட்டிங்கிள் புதுவிதமான முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்" என்றார்.