கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் பல அணிகள் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதில் டிசம்பர் மாதத்தில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி இங்கு காணலாம்.
சர்ச்சை ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட் மங்கையர்கள்:
இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்தது. அதில் முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை சந்தித்த நம் மங்கையர் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியை தழுவியது. இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டது தான். அணியின் தேர்வில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் ஒருதலைபட்சமாக இருக்கிறார் என வெளிப்படையாக கூறினார் மித்தாலி ராஜ். இது இந்திய கிரிக்கெட் போர்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனே நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, கபில் தேவ் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது. இதன் இறுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த டபுள்யூ.வி. ராமனை தேர்வு செய்தது.
வில்லியம்சனின் மருமுகம் :
நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடுவதற்காக ஐக்கிய அரபிற்கு சுற்றுபயணம் செய்தது. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என சமநிலையில் இருந்தன. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என தொடரை கைப்பற்றியது. இதிலெல்லாம் ஒன்று பெரியதாக விளங்கவில்லை, ஆனால் பரிசளிப்பு விழாவில் ஏற்பட்ட நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்), வில்லியம்சனிடம், " நீங்கள் இதை அடைவதற்கு 39 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்றே " என வினவினார். இதை வில்லியம்சன் எப்படி எடுத்து கொண்டார் என தெரியவில்லை. ஆனால் பலரும் நியூஸிலாந்து அணியை நக்கல் படுத்தியது போல இருந்தது என கூறுகின்றனர். இதனாலேயே வில்லியம்சன் "எனக்கு அவ்ளோ காலம்லாம் ஒன்றும் தேவைப்படவில்லையே" என நக்கல் தோனியில் பதில் அளித்தார்.
பிறகு, வெற்றி கோப்பையானது ஸ்பொன்சர் கையினாலேயே தரப்படுவது வழக்கம். ஆனால் வில்லியம்சன் மேஜை மீதிருந்த கோப்பையை தானாகவே எடுத்துக்கொண்டு சென்றார். பின்பு தொடர் நாயகன் விருதுக்கு தந்த ஸ்பான்சர்ஷிப் அட்டையையும் தூக்கி எறிந்தார். இந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் தீ போல பரவியது. ஆனால், அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை.
பேட் டாஸ்:

உலகின் இரண்டாவது பெரிய டி20 தொடரான பிபிஎல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் புதுமை புகுத்தும் விதமாக காயின் டாஸ்ஸிற்கு பதிலாக பேட்டின் மூலம் டாஸ் போடும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வெற்றி அடையும்பட்ச்சத்தில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இப்படியாகத்தான் ஸ்டம்ப்ஸில் எல்.இ.டி பொருத்தும் முறை மற்றும் ஹாட்ஸ்பாட் ஆகியவை உலக கிரிக்கெட்டுக்கு வந்தது.
சர்ச்சைக்குள்ளான வங்கதேச அம்பயர்:
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்திருக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் பொழுது இந்த நிகழ்வு அரங்கேறியது. இரு அணிக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்கை நிர்ணயித்தது. இதில் வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்னும் நோக்கில் வங்கதேச வீரர்கள் களம் கண்டனர்.

அப்போது பேட் செய்துகொண்டிருந்த லீட்டன் தாஸ், ஓஷன் தாமஸ் வீசிய பந்தை தூக்கியடித்தார். இதை எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டது. உடனே வங்கதேசத்தை சேர்ந்த அம்பயர் அதை நோ-பால் என அறிவித்து பிரீ-ஹிட்டும் வழங்கினார். ஆனால் டி.வி ரீபிலே-வில் அது நோ-பால் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது. உடனே வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ப்ராய்த்தவாய்ட் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தினார். ஆனால் கிரிக்கெட் விதிகளின்படி கள நடுவரின் தீர்ப்பை திரும்ப பெறுவது கடினமே என்பதால். அது நோ-பால் என்றும், அதற்க்கு பிரீ-ஹிட்டும் வழங்கபட்டது. இந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியை வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

மேலும், "நான் அளித்த தீர்ப்பு மிகவும் தவறானது இதற்காக நான் வருந்துகிறேன். நான் அனுபவம் இல்லாததால் அந்த தவறு நிகழ்ந்து விட்டது" என அந்த வங்கதேச அம்பயர் தெரிவித்துள்ளார்.