நியூசிலாந்து அணி பந்துவீச்சில் வங்கதேச அணி திணறல்

Pravin
வாக்னெர் 5 விக்கெட்கள்
வாக்னெர் 5 விக்கெட்கள்

வங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதை அடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் ஷட்மன் இஸ்லாம் இருவரும் விளையாடினர்.

இவர்கள் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் வங்கதேச வீரர் ஷட்மன் இஸ்லாம் 24 ரன்னில் போல்ட் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மொமினுள் ஹாக் சிறிது நேரம் நிலைத்து விளையாட தமிம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அரைசதத்தை கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி நிலையில் மறுபுறம் விளையாடிய மொமினுள் ஹாக் 12 ரன்னில் நீல் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய முகமது மிதுன் வந்த வேகத்தில் 8 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதனை அடுத்து களம் இறங்கிய சவுமிய சர்க்கார் 1 ரன்னில் டிம் சௌவுதி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். தடுமாற்ற நிலைக்கு சென்ற வங்கதேச அணி தமிம் இக்பால் மட்டும் நிலைத்து விளையாடி சதம் விளாசினார். இது அவருக்கு 9வது டெஸ்ட் சதம் ஆகும். நிலைத்து விளையாடிய தமிம் இக்பால் 126 ரன்னில் டி கிராண்டோம் பந்தில் அவுட் ஆகினார்.

தமிம் இக்பால் 9வது சதம்
தமிம் இக்பால் 9வது சதம்

அவரை தொடர்ந்து கேப்டன் மகமதுல்லாஹ் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். கேப்டன் மகமதுல்லாஹ் 22 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மெஹெடி ஹசன் 10 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய அபு ஜெட் வந்த வேகத்தில் 2 ரன்னில் சௌவுதி பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய கலீல் அகமது டக் ஆகினார். நிலைத்து விளையாடிய லிட்டன் தாஸ் 29 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 234 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் வாக்னெர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஜீத் ராவல் 51*
ஜீத் ராவல் 51*

அதை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜீத் ராவல் மற்றும் டாம் லேதம் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த வங்கதேச அணி தடுமாறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ராவல் அரைசதம் அடித்தார். நிலைத்து விளையாடிய லேதம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ரன்களை அடித்தார். நியூசிலாந்து அணி 86 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 148 ரன்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது வங்கதேச அணி.