வங்கதேச அணியை கதறவிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள்

Pravin
நியூசிலாந்து அணி வீரர்கள்
நியூசிலாந்து அணி வீரர்கள்

வங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹமில்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடததால் வங்கதேச அணி 234 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேச அணியில் தமிம் இக்பால் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் டெஸ்ட் போட்டியில் தனது 9வது சதத்தையும் பூர்த்தி செய்தார். அதே போல் நியூசிலாந்து அணியும் சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தியது. நியூசிலாந்தில் வாக்னெர் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதே போல் சௌவுதியும் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த நியூசிலாந்து அணி முதல் ஆட்ட நேர முடிவில் 86 ரன்கள் எடுத்திருந்தது.

டாம் லேதம் 161 ரன்கள்
டாம் லேதம் 161 ரன்கள்

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டாம் லேதம் மற்றும் ஜீத் ராவல் இருவரும் தொடர்ந்து இரண்டாவது நாளும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பின்னர் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்த வங்கதேச அணியால் விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. இதனை அடுத்து சிறப்பாக விளையாடிய ஜீத் ராவல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் விளையாடிய டாம் லேதம் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த 250 ரன்களை கடந்தும் வங்கதேச அணியால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இதை அடுத்து ஜீத் ராவல் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகமதுல்லாஹ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

கேம் வில்லியம்சன்
கேம் வில்லியம்சன்

அதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் கேம் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய டாம் லேதம் 150 ரன்களை அடித்து அசத்தினார். இதை அடுத்து டாம் லேதம் 161 ரன்னில் சவுமிய சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். இரட்டை சதத்தை பூர்த்தி செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீண் ஆகியது. பின்னர் வந்த ராஸ் டெய்லர் 4 ரன்னில் சவுமிய சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் கேப்டன் கேம் வில்லியம்சனுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் சிறப்பாக விளையாட கேம் வில்லியம்சன் அரைசத்தை கடந்தார். தொடர்ந்து விளையாடிய நிக்கோலஸ் தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நிக்கோலஸ் 53 ரன்கள் எடுத்த நிலையில் மெஹடி ஹாசன் பந்தில் அவுட் ஆகினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வில்லியம்சன் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 451-4 ரன்களை குவித்தது. வங்கதேச அணியை விட நியூசிலாந்து அணி 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

App download animated image Get the free App now