முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

Pravin
போல்ட் மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள்
போல்ட் மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள்

வங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்தாக முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்களை அடித்தது. அதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி வங்கதேச அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர். நியூசிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நியூசிலாந்து அணி வீரர்கள் ஜீத் ராவல் மற்றும் லேதம் இருவரும் தொடக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த கேப்டன் வில்லியம்சன் இரட்டைசதம் அடித்து விளாசினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 715 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

சவுமிய சர்க்கார் முதல் டெஸ்ட் சதம்
சவுமிய சர்க்கார் முதல் டெஸ்ட் சதம்

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர்களான தமிம் இக்பால் மற்றும் ஷட்மன் இஸ்லாம் இருவரும் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். தமிம் இக்பால் முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். எனினும் மறுமுனையில் விளையாடிய ஷட்மன் இஸ்லாம் 37 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய மொமினுள் ஹாக் 8 ரன்னில் வெளியேறினார். மிதுன் டக் ஆக வங்கதேச அணி தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த முகமதுல்லாஹ் மற்றும் சவுமிய சர்க்கார் இருவரும் நிலைத்து விளையாடினர். நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இவர்கள் இருவரின் ஆட்டத்தை தடுக்க முடியாமல் தடுமாறியது நியூசிலாந்து அணி. நிலைத்து விளையாடிய இந்த ஜோடி இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரின் ஆட்டத்தில் ரன்களை அதிகரித்தது வங்கதேச அணி.

முகமதுல்லாஹ் 4வது சதம்
முகமதுல்லாஹ் 4வது சதம்

சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சவுமியா சர்க்கார் 149 ரன்களை குவித்தார். 149 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய லிட்டன் தாஸ் 1 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மெஹென்டி ஹாசன் 1 ரன்னில் வாக்னெர் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய அபு ஜெட் 3 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் முகமதுல்லாஹ் 146 ரன்னில் சௌவுதி பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து இறங்கிய ஹொசைன் சௌவுதி பந்தில் டக் அவுட் ஆகினார். இறுதியில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 429 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி 52 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வில்லியம்சன் வென்றார்.

App download animated image Get the free App now