வங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நியூசிலாந்தில் உள்ள டுனெடின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் வங்கதேச அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் களம் இறங்கினர்.
முன்ரோ தொடக்கத்திலேயே தடுமாறிய நிலையில் 8 ரன்னில் மஷ்ரபி மொர்டாஸா பந்தில் அவுட் ஆகி வெளியேறினர். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் நிலைத்து விளையாடினார். அதிரடி காட்டிய மார்டின் கப்தில் 29 ரன்னில் முகம்மது சைஃபுடின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிக்கோலஸ் உடன் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் நிலைத்து நின்று அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த நியூசிலாந்து அணி தொய்விலிருந்து மீண்டது. இந்த இரண்டு வீரர்களும் அரைசதங்களை கடந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிக்கோலஸ் தனது 8வது அரைசத்தை கடந்து 64 ரன்னில் மெஹெடி ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ராஸ் டெய்லருடன் இணைந்த கேப்டன் டாம் லேதம் நிலைத்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இன்றைய போட்டியில் ராஸ் டெய்லர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார். இதமூலம் நியூசிலாந்து அணியில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெறுமையை அடைந்தார்.
ராஸ் டெய்லர் 69 ரன்னில் ருபெல் ஹுஸைன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜிம்மி நீஷம் அதிரடியாக விளையாடினார். நீஷம் 37 ரன்னில் முஸ்தாஃபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி லேதம் 59 ரன்னில் முஸ்தாஃபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய க்ராண்டோம் மற்றும் சேன்ட்னர் இருவரும் அதிரடியாக விளையாட, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கதிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய தமிம் இக்பால் டக்அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய சவுமிய சர்க்கார் அதே ஓவரில் டக்அவுட் ஆகினார். லிட்டன் தாஸ் 1 ரன்னில் அவுட் ஆகினார். மூன்று விக்கெட்களையும் டிம் சவுதியின் வேகத்தில் பறிகொடுத்தது வங்கதேச அணி. வங்கதேச அணி 2 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது களம் இறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 17 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய சப்பீர் ரஹ்மான் நிலைத்து விளையாடினார். முகமதுல்லாஹ் 16 ரன்னில் க்ராண்டோம் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய சைஃபுடின் சப்பீருடன் ஜோடி சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சைஃபுடின் 44 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மொர்டாஸா 2 ரன்னில் சவுதி பந்தில் அவுட் ஆகினார். மெஹெடி ஹசன் 37 ரன்னில் சவுதி பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி சப்பீர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் 242 ரன்களை எடுத்து 88 ரன்கள் வீத்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.