டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடிப்பாரா வில்லியம்சன்?

Pravin
வில்லியம்சன் மற்றும் கோலி
வில்லியம்சன் மற்றும் கோலி

நியூசிலாந்து அணி தற்பொழுது வங்கதேச அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 28ம் தேதி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 234 ரன்களை மட்டும் எடுத்தது. அடுத்து விளையாடி நியூசிலாந்து அணி 715 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி வீரர்கள் சதங்களை வீளாசினர். இதை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 451 ரன்களை எடுத்து 58 ரன்கள் வித்தியசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஐ.சி.சி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காண்போம்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட கூடியவர். தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இவர் தற்போழுது நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் முலம் டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் 897 ரேடிங் பாய்ண்ட்ஸ் இருந்து 915 ரேடிங் பாய்ண்ட்ஸ் முன்னேறி உள்ளார். இவர் ஹாமில்டன் போட்டியில் 200* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 18 ரேடிங் பாய்ண்ட் கூடி உள்ளது. ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி கேப்டன் வீராட் கோலி 922 ரேடிங் பாய்ண்ட்களுடன் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 7 பாய்ண்ட்கள் முன்னிலை பெற்றால் வீராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்கலாம். வங்கதேச அணியுடன் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ள நிலையில் வில்லியம்சன் ஐ.சி.சி தரவரிசை பட்டியிலில் முதல் இடம் பெறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

1. வீராட் கோலி ( இந்தியா)- 922

2. கேம் வில்லியம்சன் ( நியூசிலாந்து)-915

3. புஜாரா ( இந்தியா) – 881

4. ஸ்டிவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 857

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதம் வங்கதேச அணியுடன் ஆன முதல் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்ததன் முலம் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போன்று மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராவல் வங்கதேச அணியுடன் ஆன டெஸ்ட் போட்டியில் 132 ரன்கள் அடித்ததன் முலம் ஐந்து இடங்கள் முன்னேறி 33வது இடத்தில் உள்ளார். அதே போன்று வங்கதேச அணி வீரர் தமிம் இக்பால் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்ததன் முலம் 11 இடங்கள் முன்னேறி 25வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி வேகபந்து வீச்சாளர் வாக்னெர் இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் முலம் 11வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Edited by Fambeat Tamil