இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 23) நேப்பியரில் இந்திய நேரப்படி காலை 7:30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து XI : மார்டின் கப்தில்,காலின் முன்ரோ, கானே வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஹன்றி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டோக் பிரேஸ்வெல், டிம் சவ்தி,லாக்கி பெர்குஸன், டிரென்ட் போல்ட்.
இந்திய XI : ரோகித் சர்மா, தவான், விராட் கோலி (கேப்டன்), ராயுடு, கேதார் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.
நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார்.
ஷமியின் முதல் ஒவரின் ஐந்தாவது பந்தில் மார்டின் கப்தில் 5 ரன்களில் போல்ட் ஆனார். இந்த விக்கெட்டின் ஷமிக்கு ஓடிஐ-யில் 100 விக்கெட் வந்தது. இவர் மொத்தமாக 56 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். பின்னர் தனது இரண்டாவது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் காலின் முன்ரோ 8 ரன்களில் போல்ட் ஆனார். முதல் பவர்பிளே(1-10 ஓவர்கள்) முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ரோஸ் டெய்லர், கானே வில்லியம்சன்-உடன் கைகோர்த்து விளையாட முயற்சித்தார்.14வது ஓவர் முடிவில் நியுசிலாந்து அணி50 ரன்களை கடந்தது. 15வது ஓவரில் சகால் வீசிய 3 வது பந்தில் ரோஸ் டெய்லர் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார். 16வது ஓவரின் கானே வில்லியம்சன் கேட்சை கேதார் ஜாதவ் தவறவிட்டார்.19வது ஓவரின் சகால் வீசிய பந்தில் டாம் லேதம் 11 ரன்களில் காட்டன் போல்ட் ஆனார்.
23வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 100 ரன்களை கடந்தது. 24வது ஓவரின் கேதார் ஜாதவ் வீசிய கடைசி பந்தில் ஹன்றி நிக்கோல்ஸ் 11 ரன்களில் ,குல்தீப் யாதவ்-விடம் கேட்ச் ஆனார். 26வது ஓவரில் கானே வில்லியம்சன் தனது 36வது சர்வதேச ஓடிஐ அரைசதத்தினை அடித்தார். 30ஓவரில் ஷமி வீசிய 4வது பந்தில் மிட்செல் சான்ட்னர் , 14 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.
34வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தில் நிதானமாக விளையாடி வந்த கானே வில்லியம்சன் விஜய் சங்கர்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 81 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 64 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் டோக் பிரேஸ்வெல் 7 ரன்களில் போல்ட் ஆனார். 36வது ஓவரின் குல்தீப் யாதவ் வீசிய 2வது பந்தில் லாக்கி பெர்குஸன் தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆகி டக் அவுட் ஆனார்.
37வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 150 ரன்களை கடந்தது.குல்தீப் யாதவ் வீசிய 38வது ஓவரின் கடைசி பந்தில் ட்ரென்ட் போல்ட் 1 ரன்களில் ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் நியூசிலாந்து தனது கடைசி விக்கெட்டையும் இழந்து 38 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது. டிம் சவ்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், சகால் 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
159 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். இருவரும் கைகோர்த்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். தவான் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஓடிஐயில் தனது 5000 ரன்களை கடந்தார். இவர் ஓடிஐ-யில் 5000 ரன்களை கடக்க 118 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். அதிவேகமாக 5000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் தவான். உலக அளவில் ஓடிஐயில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை லாரா-வுடன் பகிர்ந்து கொண்டார் .
நியூசிலாந்து இன்னிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே முடிந்து விட்டதால் இந்திய இன்னிங்ஸ் முன்னதாகவே தொடங்கப்பட்டது. எனவே 9வது ஓவரில் உணவு இடைவேளை விடப்பட்டது.அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளை முடிந்து டோக் பிரேஸ்வெல் வீசிய 2வது பந்தில் ரோகித் சர்மா 11 ரன்களில் கப்தில்-டம் கேட்ச் ஆனார். 11வது ஓவரில் சூரியவெளிச்சம் நேரடியாக பேட்ஸ்மேன் மீது பட்டதால் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய தடுமாறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 30நிமிடங்கள் கழித்து ஆட்டம் தொடங்கப்பட்டது. 49 ஓவர்களில் 156 ரன்கள் புதிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கோலி மற்றும் தவான் இனைந்து சிறப்பாக விளையாடி வந்தனர்.23வது ஓவரின் 5வது பந்தில் தவான் தனது 26வது ஓடிஐ அரை சதத்தை விளாசினார்.29வது ஓவரின் லாக்கி பெர்குஸன் வீசிய 4வது பந்தில் கோலி டாம் லேதம்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களை அடித்தார்.35வது ஓவரின் 5வது பந்தில் இந்திய அணி இலக்கை எட்டியது.
தவான் 103 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
2009ற்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் , நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி 2019ல்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது ஒருநாள் போட்டி மௌன்ட் மாகுனாயில் ஜனவரி 26 அன்று நடைபெற உள்ளது.