இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை தன் வசப்படுத்தியுள்ளது. இதன் நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் சிறிதும் தயக்கமின்றி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஏற்கனவே தொடரை வென்று விட்ட நிலையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக சூப்மன் கில் அறிமுக வீரராக களம்கண்டார். இந்தியா அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றார். மேலும் டோனியின் காயம் சீராகாததால் அவர் இந்த போட்டியில் களம் காணவில்லை. ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கலீல் அஹ்மத் களமிறக்கப்பட்டார்.
நியூஸிலாந்து அணியில் ஹென்றி, காலின் டீ க்ராண்ட்ஹோம், நீசம் மற்றும் ஆஸ்லே ஆகியோர் முன்ரோ, பெர்குசன், சோதி மற்றும் ப்ரஸ்வெல்க்கு களம்கண்டனர்.
இதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இந்த போட்டி ரோஹித் சர்மா பங்குபெறும் 200வது போட்டியாகும். ஹென்றி மற்றும் போல்ட் கூட்டணி பந்துவீச்சு தாக்குதலை தொடுத்தது. முதல் 5 ஓவேர்கள் வழக்கம்போல் சீரான முறையில் ரன்கள் சேர்த்து சென்று கொண்டிருந்தது இந்திய அணி. பிறகு 6வது ஓவரை வீச வந்த போல்ட் தவான்-ஐ 13(20) lbw ஆக்கி வெளியேற்றினார். இதில் தொடங்கியது இந்தியாவின் சரிவு. தனது முதல் போட்டியில் களமிறங்கிய கில் மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் ரோஹிதுடன் சிறிதுநேரம் களத்தில் நின்றார். பிறகு போல்ட் ஓவேரில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் ரோஹித் சர்மா 7(23). தனது 200வது போட்டியில் 200 ரன்கள் குவிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து வந்த ராயுடு அடித்து ஆட நினைத்து கவரில் நின்ற குப்திலிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். இதே ஓவேரில் தினேஷ் கார்த்திக் தேவையே இல்லாமல் வெளியே செல்லும் பந்தை அடிக்க நினைத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்களையும் க்ராண்ட்ஹோம் கைப்பற்றினார்.
பின்னர் கில் 9(21) மற்றும் கேதார் ஜாதவ் 1(7) ஆகியோர் போல்ட் பந்துவீச்சில் காலியாகினர். சிறுது நேரம் பேட்டை சுழற்றிய பாண்டியாவும் 16(20) போல்ட் ஓவேரில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் போல்ட் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் பின்பு இந்திய அணியின் சூழல் கூட்டணி பேட்டிங்கில் சிறிது நேரம் அசத்தியது. இவர்கள் இருவரும் இணைந்து இந்த இன்னிங்சின் சிறந்த பாட்நெர்ஷிப்-ஐ செய்தது. பின்பு வந்த சூழல் பந்துவீச்சாளர் அஸ்லே மற்றும் நீசம், குலதீப் 15(33) மற்றும் கலீல் 5(5) விக்கெட்டுகளை முறையே வீழ்த்தி இந்தியா இன்னிங்க்சை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
முடிவில் இந்திய அணி முப்பது ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் எடுத்து. அதிகபச்சமாக சஹால் 18(37) ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து சார்பில் போல்ட் 5, க்ராண்ட்ஹோம் 3, அஸ்லே 1, நீசம் 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது இன்னிங்க்சை தொடங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரராக குப்தில் மற்றும் நிக்கோலஸ் களம்கண்டனர். இதில் இன்னிங்ஸ் முதல் மூன்று பந்துகளையும் பௌண்டரிக்கு விரட்டி அசத்தினார் குப்தில் 14(4), பின்பு சுதாரித்து கொண்ட புவனேஸ்வர் குமார் இவரது விக்கெட்டையும் அடுத்து வந்த வில்லியம்சன் 11(18) விக்கெட்டையும் வீழ்த்தி சற்று ஆறுதல் தந்தார்.
இதை அடுத்து நிக்கோலஸ் மற்றும் டெய்லர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு அணியின் வெற்றியையும் உறுதி செய்தனர்.இறுதியில் நிக்கோலஸ் 30(42), டெய்லர் 37(25) ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே தொடரை இழந்த நியூலாந்து அணிக்கு சற்று ஆறுதலாக இருக்கும் . இவ்விரு அணிகளுக்கு இடையே ஆன 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும்.