2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் உலக கோப்பை இம்முறை இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற 10 நாடுகள் பங்கேற்று வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
ஜுன் 1 ஆம் நாள் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 98 போட்டிகளில் மோதியுள்ளன இவற்றில் நியூசிலாந்து அணி 48 போட்டிகளும் போட்டியிலும் இலங்கை அணி 41 போட்டிகளிலும் வென்று உள்ளன. மூன்று முறை போட்டி டை யில் முடிவடைந்துள்ளது. 8 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
உலக கோப்பையில் 10 போட்டிகளில் மோதியுள்ளன இரண்டு அணிகளும் இலக்கை அணி 6 போட்டியிலும் நியூசிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இங்கிலாந்தில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன, இவற்றில் நியூசிலாந்தின் இரண்டு முறையும் இலங்கை அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே மேலும் மேலும் சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்.
பேட்டிங் :
371-7 இதுவே இந்த அணிக்களுகிடையே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து அணி 2019 ஆம் ஆண்டு விளாசின.
73 ஆல் அவுட் இதுவே இந்த அணிகளுக்கிடையே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து அணி, 2007 ஆம் ஆண்டு.
1568 இந்த இரண்டு அணிகளுக்கிடையே அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் குமார் சங்ககாரா.
36 இரண்டு அணிகளுக்கிடையே விளாசப்பட்ட சதங்களின் எண்ணிக்கையாகும்.
5 இரண்டு அணிகளுக்கிடையே அதிக சதங்கள் அடிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஜெயசூரிய முதலிடத்தில் உள்ளார்.
12 இரண்டு அணிகளுக்கிடையே அதிக அரைசதங்கள் அடிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் குமார் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார்.
41 இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அதிக சிக்சர்களை அடித்தவர் ஜெயசூர்யா.
பவுலிங் :
74 இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன்.
5/9 இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்துவீச்சை முத்தையா முரளிதரன் 2002 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.
8 முறை இரண்டு அணிகளுக்கிடையே 5-விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுளன.
2 முறை இரண்டு அணிகளுக்கிடையே 5-விக்கெட்கள் எடுத்த வீரர் முத்தையா முரளிதரன்.
விக்கெட் கீப்பிங்:
52 இரண்டு அணிகளுக்கு இடையே அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் குமார் சங்கக்காரா.
4 ஒரே இன்னிங்சில் அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர்களின் பட்டியலில் 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை சேர்த்த டிம் சிபர்ட், 1996 ஆம் ஆண்டில் லீ ஜெர்மன் மற்றும் 1997 ஆம் ஆண்டு இலங்கை அணியை சேர்த்த ரோமேஷ் களுவிதரண, 2003 ஆம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் போன்ற வீரர்கள் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பீல்டிங்:
24 கேட்ச்களை பிடித்த ரோஸ் டெய்லர் இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.