2019 தொடரில் இந்திய அணி எதுக்கு எட்பஸ்டன் மைதானத்தில் இரு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் முறையே இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி மோத இருக்கின்றது. மொத்தம் 10 போட்டிகளில் இதுவரை இந்திய அணி விளையாடி உள்ளது. அவற்றில், ஏழு வெற்றிகளை குவித்தும் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3 வெற்றிகளையும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தில் குறிக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பில் எடுத்துரைக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
319 / 3 - பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்து இருந்தது இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 190 / 10 - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 190 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை ஆட்டமிழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
290 - இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இம்மைதானத்தில் 290 ரன்களை குவித்துள்ளார்.
123* - மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 123 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட இந்திய அணியின் தனிநபர் அதிகபட்ச ரன்கள் ஆகும்.
12 - இதுவரை இந்த மைதானத்தில் 12 அரை சதங்கள் இந்திய வீரர்களால் குவிக்கப்பட்டுள்ளன.
4 - இந்தியாவின் ராகுல் டிராவிட் இம்மைதானத்தில் நான்கு அரை சதங்கங்களை கண்டுள்ளார்.
பவுலிங் சாதனைகள்:
9 - இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இந்த மைதானத்தில் 9 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.
3 / 27 - இந்திய அணியின் "தாதா" என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அள்ளியது ஒரு போட்டியில் இந்திய பந்து வீச்சாளரின் சிறந்த சாதனையாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
7 - தோனி இதுவரை இந்த மைதானத்தில் 7 விக்கெட்களை தமது விக்கெட் கீப்பிங் பணியால் வீழ்த்தியுள்ளார்.
3 - 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் 3 வீரர்களை தமது விக்கெட் கீப்பிங் மூலம் வீழ்த்தியுள்ளார். இது ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்ட சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
4 - யுவராஜ் சிங் இந்த மைதானத்தின் இதுவரை நான்கு கேட்சுகளை பிடித்து முன்னிலை வகிக்கிறார்.
3 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே போட்டியில் 3 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.