ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக லீக் போட்டிகள் 2-ல் கனடா அணி பப்புவா நியூ கினியாவை வென்ற போது வரலாற்றின் ஒரு பகுதியானது கனடா அணி. புதன்கிழமை ஹாங்காங்கில் ஓமன் பெற்ற வெற்றி, ஒருநாள் அந்தஸ்தைச் எளிதாக்கியது. ஓமன் மட்டுமல்ல, அமெரிக்கா (USA) அணியும் ஒருநாள் சர்வதேச அணியாக உருவெடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் தற்போது ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன என்று அறிவித்துள்ளது.
ஓமனின் இந்த வெற்றி, இதுவரை நடைபெற்று வரும் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் பிரிவில் 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரே அணி. இப் போட்டியில் இருந்து டாப் நான்கு அணிகள் மோதும் ஒருநாள் போட்டியை ஐசிசி கணக்கில் கொள்ளும். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையையில் ஹாங்காங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஓமன் அணி.
உலக கிரிக்கெட் லீக் பிரிவு பகுதி 2ல் நேற்று நடைபெற்ற போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்த நிலையில், தங்களது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாள் சர்வதேச அந்தஸ்தை அமெரிக்கா பெற்றுள்ளது. முதல் மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றி பெற்ற ஓமன் அணியும் ஒருநாள் போட்டி அந்தஸ்தையும் பெற்றது.
பப்புவா நியூ கினியா, ஹாங்காங், நமபீபியா, கனடா, ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வரும் டாப் நான்கு அணிகள் ஸ்காட்லாந்து, யுஏஇ, நேபாளம் ஆகிய நாடுகள் உடன் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக்-ல் இணைகிறது.
ஓமனிடம் ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த பின் அமெரிக்கா, நமீபியா அணிக்கெதிராக இரண்டு ரன்கள் வித்தியாசத்திலும், பிஎன்ஜி அணிக்கெதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும், ஹாங்காங்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றியை தனதாக்கியது அமெரிக்கா. இந்த வெற்றி, போட்டித் தொடரின் மூன்றாவது வெற்றியாகும். நான்கு ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வென்றுள்ளது அமெரிக்க அணி.
இப்போது இவர்கள் ஏப்ரல் 26ம் தேதி கனடாவை எதிர்கொள்வார்கள். தற்போது நான்கு ஆட்டங்களில் ஆறு புள்ளிகளுடன் தர வரிசைபட்டியலில் மேல் இருக்கும் அவர்கள், இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.
இது இரண்டு வருட கடின உழைப்புக்கான வெற்றி என்று கூறிய அமெரிக்கா பயிற்சியாளர் தஸநாயக்க, இது அமெரிக்க அணியின் இளம் வீரர்களின் மிகப் பெரிய சாதனை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
மறுபுறம் ஓமன்- அமெரிக்கா, கனடா மற்றும் ஹாங்காங்கை தங்களது முதல் மூன்று ஆட்டங்களில் தோற்கடித்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளனர். நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, இறுதியில் பிஎன்ஜியை எதிர்கொள்வார்கள்.
" நாங்கள் ஒருநாள் போட்டியில் சாதித்ததால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பொறுப்பை சரியாக உணர்ந்து கொண்டனர், கிரிக்கெட்டில் ஹை பிரசர் சூழ்நிலையை கவனமாக கையாண்டனர். நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அணி நிர்வாகம் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்கு மிகவும் நன்றி "என்று ஓமன் அணி பயிற்சியாளர் ஜஷான் கூறினார்.