டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 27+ ரன்கள் அடித்த வீரர்கள்!!

Brian Lara
Brian Lara

பொதுவாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அனைவரும், பொறுமையாக நிலைத்து நின்று விளையாடி தான் ரன்களை சேர்ப்பார்கள். ஏனென்றால் அடித்து விளையாட நினைத்தால் விரைவில் அவுட்டாகி வெளியேற கூடிய சூழ்நிலை ஏற்படும். சர்வதேச டி20 போட்டிகளில் தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 27+ போன்ற ரன்களை அடிப்பார்கள். ஆனால் ஒரு சில பேட்ஸ்மென்கள் டெஸ்ட் போட்டியில் கூட ஒரே ஓவரில் அதிரடியாக 27+ ரன்களை அடித்துள்ளனர். அந்த பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

#1) பிரைன் லாரா ( 28 ரன்கள் )

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிரைன் லாரா. இவர் ஒரே இன்னிங்சில் 400 ரன்களை விளாசியிருக்கிறார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் பீட்டர்சன் ஓவரை அதிரடியாக விளையாடிய பிரைன் லாரா, அவர் வீசிய 6 பந்துகளில் 28 ரன்களை விளாசினார். இவர் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 34 சதங்களையும், 48 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2) ஜார்ஜ் பெய்லி ( 28 ரன்கள் )

George Bailey
George Bailey

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜார்ஜ் பெய்லி. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெமி ஆண்டர்சன் வீசிய ஓவரை, ஆஸ்திரேலிய அணியின் ஜார்ஜ் பெய்லி அதிரடியாக 28 ரன்களை விளாசினார். இவர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#3) ஷாகித் அப்ரிடி ( 27 ரன்கள் )

Shahid Afridi
Shahid Afridi

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அதிரடிக்கு பெயர் போன, பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷாகித் அப்ரிடி. இவர் அதிரடியாக சிக்சர்கள் விளாசுவதில் வல்லவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், முன்னணி அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வீசிய ஓவரை, ஷாகித் அப்ரிடி அதிரடியாக விளையாடி 27 ரன்களை விளாசினார். இவர் மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 1716 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 சதங்களும், 8 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி இவர் டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.