அடுத்த நாளின் முதல் இன்னிங்சில் ராம்நரேஷ் சர்வான்(51) வீழ்த்தப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளுக்கு 196 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டம் இந்திய வசம் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் ஷீவ்நரைன் சந்தர்பால் களம் கண்டு இந்திய அணியின் நம்பிக்கையை உடைத்தார். ஹூப்பர் மற்றும் சந்தர்பால் இணைந்து மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய வேகப்பந்து முப்படையான ஜவஹால் ஶ்ரீ நாத், ஜாஹீர் கான், ஆஸீஸ் நெக்ரா ஆகியோர் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களை வீழ்த்த பலவாறு முயற்சி செய்தனர். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் ஃபிளாட் ஆடுகளத்தில் நன்றாக விளையாட ஆரம்பித்தது. பின்னர் சச்சின் டெண்டுல்கர் மீண்டுமொருமுறை கேப்டன் கார்ல் ஹூப்பர்-ஐ 136 ரன்களில் வீழ்த்தினார்.
இந்த விக்கெட்டிற்கு பின் களமிறங்கிய ரைட் ஜேக்கோப்ஸை ஆரம்பத்திலேயே வீழத்தி, கடைநிலைபேட்டிங்கை சொற்ப ரன்களில் வீழ்த்தி 460 ரன்களில் கட்டுபடுத்தி ஒரு நல்ல முன்னிலையில் இந்தியா இருக்க நினைத்திருந்தது. ஆனால் ஜேக்கோப்ஸ் மிகவும் அதிரடியாகவும், சந்தர்பால் தடுத்தும் விளையாடி வந்தனர். அந்த சமயத்தில் கங்குலியிடம் யாரை பந்துவீச செய்வது என் விளங்காமல், அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் பந்துவீச செய்வதன முடிவு செய்தார். விக்கெட் கீப்பர் அஜய் ரத்ராவும் பௌலிங் செய்ய அழைக்கப்பட்டார். இவர் பந்துவீசும்போது ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக இருந்தார்.
அனுபவம் மற்றும் அனுபவமில்லா பௌலர்களுள், இந்திய தடுப்பு சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஜேக்கோப்ஸை (118) வீழ்த்தி இந்திய ரசிகர்கள் முகத்தில் புன்னகை தவளச் செய்தார்.
இந்த விக்கெட்டிற்குப் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடவில்லை. மெர்வின் தில்லன் மற்றும் பென்ரோ காலின்ஸ் ஆகிய இருவரும் வாஸீம் ஜஃபரால் வீழ்த்தப்பட்டார். அடுத்ததாக கடைசி பேட்ஸ்மேன் கேம்ரூன் கஃபீ-ஐ VVS லக்ஷ்மன் வீழ்த்தினார்.
ஆட்டத்தின் இறுதி ஸ்கோர் நிலவரம்
இந்தியா 513/9, மேற்கிந்தியத் தீவுகள் 629/9
முடிவு: டிரா
ஆட்டநாயகன்: அஜய் ரத்ரா (இந்தியா)
இப்போட்டியில் இந்திய பௌலிங் வரிசை: