கடந்த சில தினங்களாக அனைத்து செய்திகளிலும் வைரலாக பரவி வருபவர் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இதற்கு காரணம் சமீபத்தில் நடந்த "காபி வித் கரண்" எனும் பாலிவுட் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசியவை பல கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்கும் படி செய்தது. அது பற்றி இன்னும் விரிவாக காண்போம்.
சமீபத்தில் நடந்த காபி வித் கரண் எனும் பாலிவுட் தொலைக்காட்சி தொடரில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றிருந்தனர். இவர்கள் இருவருக்கும் பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து விசாரணையில் ஹர்திக் பாண்டியா அந்த நிகழ்ச்சியில் பெண்களை பற்றி தவறாக பேசியுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பபட்ட சில மணி நேரங்களில் பாண்டியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே பாண்டியா மற்றும் ராகுல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் வினோத்ராய் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
பாண்டியா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தமான செய்தி ஒன்றை பதிவேற்றியுள்ளார், அதில் அவர் குறிப்பிட்டிருப்பது “உண்மையை கூற வேண்டுமெனில் நிகழ்ச்சி போக்கில் என்னை மறந்து அவ்வாறு கூறிவிட்டேன், எனக்கு உண்மையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ நோகடிக்கும் நோக்கமோ இல்லை என மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் இது குறித்து ராகுல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
பாண்டியாவின் விமர்சனங்கள் குறித்து கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் கிர்க்கெட்டுக்கு தொடர்பில்லாத இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்க பரிசீலனை செய்வதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான அணியில் பாண்டியா இடம் பெற்றுள்ளார். அதன் பின் கிரிக்கெட் உலககோப்பையும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பெண்களை பற்றிய இவரது இழிவான கருத்துகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய்ள்ளது.
இது குறித்து பிசிசிஐ-யின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளது, "ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோருவது இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவராது. இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் எனவும், ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் பொது நிகழ்ச்சியில் இது போன்று பேசுவது ஏற்றுக் கொள்ளதகாது எனவும் நல்லது கெட்டது அறிந்து பேச வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சச்சின் சிறந்த பேட்ஸ்மேனா? இல்லை கோலி சிறந்த பேட்ஸ்மேனா? என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு இருவரும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என கூறியிருந்தனர். சச்சின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோரை வருத்தெடுத்தனர். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கி இருந்தது, அது அவர்கள் தனிபட்ட விருப்பமாயினும் பெண்களை பற்றி கூறியது தவறான செயலே என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு வரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது அவர்களின கிரிக்கெட் வாழ்வினை பெரிதும் பாதிக்கும்.