பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. தென்னாபிரிக்காவின் அபாரமான பந்து வீச்சை ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தனது விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. பின்னர் பாகிஸ்தான் கேப்டன் உடன் ஜோடி சேர்ந்த ஹசன் அலி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக,விளையாடிய ஹசன் அலி அரை சதத்தை அடித்தார். இறுதியில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பத்தாவது வீரராக களமிறங்கிய ஒரு வீரர் அடித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாகிஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
எளிமையான இலக்கை அடைவதற்கு பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 100 ரன்கள் அடிப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. வண்டர் டுசன் உடன் இணைந்த ஆண்டில் பலுகாவாயோ அணியை சரிவிலிருந்து மீட்டனர் ஆண்டில் அபாரமாக ஆடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஆட்டத்தின் 37 வது ஓவரில் ஆண்டில் பலுகாவாயோ ஆடிக்கொண்டிருந்தபோது தோல்வியடைந்து விடுவோம் என்ற கடுப்பில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ், எதிரணி தரப்பில் ஆடிக்கொண்டிருந்த வீரரின் நிறத்தை கூறி கமெண்ட் செய்தார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதனை என்னவென்று ரமிஸ் ராஜாவிடம் தென்னாபிரிக்க வர்ணனையாளர் கேட்டபொழுது மொழிமாற்றம் செய்வது மிகவும் கடினம் என்று மழுப்பினார்.
சர்ஃப்ராஸ் கூறிய வார்த்தைகளின் மொழிமாற்றம் இதோ :
"ஹேய் கறுப்பா, உனது தாயார் இங்கே உட்கார்ந்து இருக்கிறார் போலும் . அவரிடம் நீ நல்லா ஆட வேண்டும் என்று வேண்டிடசொன்னாயா" என்று விமர்சனப்படுத்தினார் பாக்கிஸ்தான் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான சர்ஃப்ராஸ்
இது கிரிக்கெட் உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி கிரிக்கெட் உலகில் சம நிலையை ஏற்படுத்த பாகிஸ்தான் கேப்டனை ஓரிரு போட்டிகள் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளையும் இழக்காமல் இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று தென்னாப்பிரிக்கா சமநிலை செய்துள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. எனவே அந்த வீரர்கள் ஆட்டத்தில் கவனத்தை செலுத்துவது அந்த அணிக்கு மட்டுமில்லாமல் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும். எனவே இது போல் சர்ச்சையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் சிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வருகிற ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடக்க இருக்கிறது.