தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது.
அணியின் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார். அணியில் அதிக பட்சமாக பாபர் ஆசாம் 71 ரன்கள் எடுத்தார் பின்னர் களம் இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்களை இழந்து வெளியேறினர்.தென் ஆப்ரிக்காவின் இளம் வீரர் ஒலிவேர் 6 விக்கெட்களை விழ்த்தினர். ரபாடா 3 விக்கெட்கள் விழ்த்தினர், ஸ்டைன் ஒரு விக்கெட்டை எடுத்தார். ஸ்டைன் இந்த விக்கெட்டின் முலம் அதிக விக்கெட் பெற்ற தென் ஆப்ரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 127 ரன்கள் எடுத்தது. முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அணியின் கேப்டன் டுப் -ப்ளாசிஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பவுமா மற்றும் தெனிவுஸ்-டி-ப்ரைன் 69 ரன்கள் எடுத்தனர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 127-5 எடுத்தது. பவுமா 38 ரன்களும் ஸ்டைன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் பவுமா தனது 12 வது அரை சதத்தை அடித்தார் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாஹீன் அப்ரிடியின் பந்துவிச்சில் அவுட் ஆகினார். ஸ்டைன் 23 ரன்களில் அமீர் பந்துவீச்சில் விக்கெடை இழந்தார். பின்னர் களம் இறங்கிய குயிண்டன்- டீ-காக் நிலைத்து விளையாடி 45 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெடுகளை இழந்தனர், ரபாடா 19 ரன்கள் ஏடுத்தார். டீ-காக் விக்கெடை அமீரும்,ரபாடா விக்கெடை அப்ரிடியும், மாகராஜா விக்கெடை ஹசன்-அலீயும் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களை எடுத்தது. இதன் முலம் பாகிஸ்தான் அணியை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணியின் அமீர் மற்றும் அப்ரிடி தலா 4 விக்கெட்களையும் ஹசன்-அலீ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது, அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் பக்கர் ஜமான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் பக்கர் ஜமான் 12 ரன்களில் ஒலிவேர் பந்தில் அவுட் ஆகி பெவுலீயன் திரும்பினார். இமாம் -உல்-ஹக் பொறுமையாக விளையாடி முன்றாவது அரைசதத்தை நிறைவு செய்தார், இவருடன் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் தேனீர் இடைவேளி வரை 57 ரன்கள் சேர்த்தனர். தேனீர் இடைவேளிக்கு பிறகு இமாம்-உல்-ஹக் 57 ரன்களில் ஒலீவேர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய அசார் அலீ டக் அவுட் ஆகி வெளியேறினார். மசூத் நிலைத்து விளையாடி தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஒலீவேர் தனது சிறப்பான பந்துவீச்சால் முதல் மூன்று விக்கெட்களை சாய்த்தார். பிறகு வந்த பாகிஸ்தான் வீரர் அஸத் ஷபிக் 6 ரன்களில் ஸ்டைன் பந்துவீச்சில் டீ-காக்கிடம் கேட்ச் ஆனார். பிறகு இறங்கிய பாபர் ஆசாம் 6 ரன்களிளும் ரபாடா பந்தில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சப்ராஸ் அகமது இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆனார் இவரின் விக்கெடை ரபாடா வீழ்த்தினார். பின்னர் இறங்கிய அமீர் ரபாடா ஒவரில் அவுட் ஆனார், யாசிர் ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். நிலைத்து நின்று விளையாடியா மசூத் 65 ரன்களில் ஸ்டைன் பந்தில் அவுட் ஆகினார்
பாகிஸ்தான் அணி 190 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்தது. தென் ஆப்ரிக்காவின் ஒலீவேர் 5 விக்கெட்களும், ரபாடா 3 விக்கெட்களும் ஸ்டைன் 2 விக்கெட்களும் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா விற்கு 148ரன்களை இலக்காக நிர்ணயத்தது பாகிஸ்தான் அணி. தென் ஆப்ரிக்காவின் ஒலீவேர் இரண்டு இன்னிங்சிளும் சேர்த்து 11 விக்கெட்களைவீழ்த்தி சாதனை புரிந்தார். டெஸ்ட் போட்டியில் இவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.