உலக கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் குடும்பத்தினருக்கு நோ சொன்னது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள்

உலக கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினருடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களான மனைவிகள் மற்றும் குழந்தைகள் அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

உலகக் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையை காண மற்றும் உடன் பயணம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என பிசிபிஐ வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவர்கள் இருக்கலாம் ஆனால் உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

வீரர்கள் கோரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களின் மனைவியும் குழந்தைகளும் தங்கியிருக்க அனுமதி வேண்டும் என்று கேப்டனும் வீரர்களும் பரிந்துரை செய்தனர் ஆனால் அதை நிர்வாக குழுவினர் ஏற்க்கவில்லை. உலகக்கோப்பையில் கிரிக்கெட் வீரர்களின் முழுமையான கவனம் வெற்றி பெறுவதில் இருக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக உள்ளது என கூறினார்.

ஒரு தொலைக்காட்சி சேனலின் நேர்காணலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்பராஸ் அவர்கள் வீரர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் இருப்பதால் நீண்ட கால சுற்றுப் பயணங்களில் அவர்களின் மனவலிமை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். உலக கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நீண்ட காலமாக இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு வீரர் தனது அறைக்கு பயிற்சியை அல்லது ஆட்டத்தை முடித்து விட்டு திரும்பும்போது அவர்களின் அழுத்தங்கள் மற்றும் சோர்வை போக்குவதில் குடும்ப உறுப்பினர்களின் பங்கு அதிகமாக இருக்கும். உலக கோப்பை தொடரின் போது மனைவி குழந்தைகளுடன் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் சோர்வு நீக்கி மன நிறைவுடன் ஓய்வெடுக்கலாம் இதனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் விளையாடலாம் என கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைதள பயன்பாட்பையும் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக நிர்வாக குழு வட்டாரத்தில் தெரிகிறது.

பாக் பிரதமருடன் அணி வீரர்கள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத்

உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் வாழ்த்து பெற்றனர். அந்நிகழ்வின்போது வீரர்களுக்கு அறிவுரை வழங்கியது மட்டுமல்லாமல் விருந்தும் அளித்துள்ளார். வெற்றி பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.இந்த சந்திப்பின் போது அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் முன்னாள் வீரர்கள் தேர்வுக் குழுவினர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

Quick Links

Edited by Fambeat Tamil