பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் தனித்தன்மை பெற்றே விளங்குகிறது. அதுமட்டுமின்றி அணியில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எல்லா காலகட்டத்திலும் கொண்டுள்ளது பாக்கிஸ்தான் அணி. இம்ரான் கான், சோயிப் அக்தர், வாசிம் அக்ரம் போன்ற பல தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய பெருமை பாகிஸ்தான் அணியையே சாரும். 2019-ல் சற்று தடுமாறி வரும் பாகிஸ்தான் அணிக்கு 2018 ஆம் ஆண்டு பொன்னான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி பல வெற்றிகளைக் கண்டு கோப்பைகளை தன்வசமாக்கியது. இவ்வாறு அந்த அணி 2018-ல் படைத்த சாதனைகளை இங்கு காணலாம்.
#5) அதிவேகமாக 1000 ரன்கள் ஒருநாள் போட்டியில் குவித்தவர் – பஃகர் ஜமான் ( 18 இன்னிங்ஸ் )
பஃகர் ஜமான் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரராக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர் சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராக சதமடித்து அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் அந்த தொடரில் 4 போட்டிகளில் சுமார் 246 ரன்கள் குவித்தார். பின்பு ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் 210* ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்காக முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் அந்த தொடரில் மட்டும் 5 போட்டிகளில் 515 ரன்கள் குவித்து வெறும் 19 இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்து அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதன் மூலம் இவர் பாபர் அஸாம் 21 போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.
#4) அதிவேகமாக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்தவர் – யாசிர் ஷா ( 33 டெஸ்ட் )
பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளராக விளங்குபவர் யாசிர் ஷா. காரணம் இவரது சுழல் பந்து வீச்சினால் அனைத்து அணி வீரர்களின் விக்கெட்டுகளையும் எளிதில் கைப்பற்றுபவர். 32 வயதான யாசிர் ஷா 2014 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இவர் 33 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கிளார் கிராமிட் 36 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 82 வருட சாதனையை உடைத்தார். இதுமட்டுமின்றி இவர் பாகிஸ்தான் அணிக்காக அதிவேக 50 விக்கெட்டு ( 9 போட்டிகள் ) மற்றும் 100 விக்கெட்டுகளை ( 17 போட்டிகள் ) வீழ்த்தியவர் ஆவார்.
#3) ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓப்பனிங் பாட்னர்ஷிப் ( பஃகர் ஜமான் மற்றும் இமாம்-உல்-அக் – 304 ரன்கள் )
ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அதிலும் துவக்க வீரர்கள் ஆரம்பபே அணியிக்கு இலக்கிற்கு அடித்தளமிடும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான பஃகர் ஜமான் மற்றும் இமாம்-உல்-அக் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இலங்கை அணியின் துவக்க வீரர்களான தரங்கா மற்றும் ஜெயசூர்யா முதல் விக்கெட்டிற்கு குவித்த 286 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளனர்.
#2) டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் – பாபர் அஸாம் ( 26 இன்னிங்ஸ் )
பாகிஸ்தான் அணியின் விராத் கோலி என அழைக்கப்படுபவர் பாபர் அஸாம். இவர் விராத் கோலி போலவே அணிக்காக ரன்கள் குவிப்பதிலும் சதங்கள் விளாசுவதிலும் வல்லவர். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக1000 ரன்களை கடந்தார். ஆனால் அந்த சாதனையை பஃகர் ஜமான் முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டி போலவே டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் பாபர் அஸாம் வெறும் 26 போட்டிகளிலே 1000 ரன்களை கடந்து அதிவேகமாக டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர் என்றசாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இவர் விராத் கோலியின் முந்தைய சாதனையை ( 27 இன்னிங்ஸ் ) முறியடித்துள்ளார்.
#1) ஒருவருடத்தில் அதிக டி20 போட்டிகள் வெற்றி பெற்ற அணி பாகிஸ்தான் – 17 போட்டிகள்
பாகிஸ்தான் அணி 2018 ஆம் ஆண்டு அதிகமாக டி20 தொடர்களில் பங்கேற்றது. இதில் பல போட்டிகள் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி கடந்த வருடம் 17 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு வருடத்தில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் (15 வெற்றிகள் ) சாதனை முறியடித்துள்ளது.