ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இம்மாதம் 30 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கின்றது. இந்த பெருமை மிக்க தொடரில் நடைபெறும் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகள் சந்திக்க இருக்கின்றன. ஏற்கனவே, சில அணிகள் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அதன்படி, இந்திய அணியும் இன்று இங்கிலாந்திற்கு புறப்பட்டது. இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி ஆட்டம் வரும் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12 வது சீசன் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் இந்திய வீரர்களுக்கு சிறிது காலம் ஓய்வு அளிக்க விரும்பியது. அதன்படி, இந்திய அணி வீரர்களும் 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்தனர். இதன் பின்னர், புத்துணர்ச்சியோடு திரும்பிய இந்திய அணி மும்பையில் ஒன்றாக இணைந்து இங்கிலாந்திற்கு புறப்பட்டனர். இதற்கு முன்னர், கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உலக கோப்பை தொடரில் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தனர்.
15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பயிற்சியாளர் வீரர்கள் மற்ற வேலையாட்கள் அடங்கிய இந்திய அணியினர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டனர். இதன்படி, இந்திய அணி வீரர்கள் கிளம்புவதை சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படத்தை பதிவிட்டனர். பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இந்திய வீரர்கள் அனைவரும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தபோது பல புகைப்படங்களை எடுத்து எடுத்து வெளியிட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருந்தனர். எனவே, அவ்வாறு சில சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்களை பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெறும் இந்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி முடிய உள்ளது இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர் கொள்ள உள்ளது அதற்கு பின்னர் நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர் கொள்ளும்.