பிரித்வி ஷா-விற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

 பிரித்வி ஷா வலியால்
 பிரித்வி ஷா வலியால்

இந்தியா, ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு எதிராக நடந்த நான்கு நாள் பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா-வுக்கு இடது கனுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 66 ரன்களை சேர்த்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்க வைத்தார். இந்த டெஸ்ட் தொடரில் விடுவிக்கபட்டது அவருக்கு பெரும் இழப்பாகவே பார்க்கபடுகிறது.

ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தின் போது அஸ்வின் வீசிய பந்தை மேக்ஸ் பிரயன்ட் தூக்கி அடித்தார். அப்போது பவுண்ரி எல்லையில் நின்ற பிரித்வி ஷா பந்தை பிடிக்க முயன்ற போது கணுக்காலை மடக்கி விழுந்தார். இதனால் இடது கனுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் சுருண்டு விழுந்தார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுகமான இவர் 3 இன்னிங்சில் 1 சதம் சேர்த்து மொத்தமாக 237 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி ஷா விற்கு பதிலாக 3 வீரர்கள் :

1. ரோகித் சர்மா :

2013 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களும் 9 அரை சதங்களும் உட்பட பேட்டிங் சராசரி 40 என்ற அளவை கொண்டுள்ளது..

அவரது கடைசி டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா-வுடன் நல்ல ஆட்டத்திரனை வெளிப்படுத்த தவறினார். எனினும் ஸ்ரீலங்கா மற்றும் நியூசிலாந்து எதிராக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிருந்தார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் முன் அவரது கடைசி ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸின் ரன் குவிப்புக்கள் 82, 51, 102, 65 மற்றும் 50 ரன்கள்.

நடுத்தர வரிசையில் 43 இன்னிங்ஸில் விளையாடிய இவர் தொடக்க ஆட்டக்காரராக ஒரு வாய்ப்பை அளித்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாள் போட்டிகளை போல் , இவர் பிரதிபலிக்கும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

2. பார்திவ் படேல் :

தொடக்க நேரங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுள் இவரும் ஒருவர் மேலும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி- யின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு பார்திவ் படேலிற்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப்பட்டன .

பார்திவ் படேல்
பார்திவ் படேல்

டெஸ்ட் போட்டியில் 38 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் சராசரி விகிதம் 53 மற்றும் 265 ரன்களை எடுத்திருக்கிறார். இது அவரது ஆரம்ப சராசரியை விட அதிகம்.6 அரை சதங்களை பூர்த்திசெய்துள்ளார். இந்திய பேட்டிங் வீரர்களில் ஒரு பரபரப்பான தொடக்கத்தை வழங்க கூடிய வீரர்களுள் இவரும் ஒருவர்.

பார்திவ் படேல் பேட்டிங் சராசரி
பார்திவ் படேல் பேட்டிங் சராசரி

3.செட்டேஷ்வர் புஜாரா :

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் நம்பத்தகுந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்களில் இவரும் ஒருவர். நீண்ட நேரம் விளையாடக்கூடிய பார்ட்னர்ஷிப் கொடுக்கும் வீரராகவும் அறியப்படுகிறார்.

புஜாரா.மாறாக ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா எதிரான நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை கண்டிருக்க முடியும்.

செட்டேஷ்வர் புஜாரா
செட்டேஷ்வர் புஜாரா

64 டெஸ்ட் தொடரில் விளையாடி பேட்டிங்கில் அதிக திறமையும் வெளிப்படுத்திய வீரர். ஸ்ட்ரைக் ரேட் 47.05 என்ற அளவிலும் 15 சதங்களோடு 19 அரை சத்தங்களையும் அதிகபட்ச்சமாக 206 ரன்களை எடுத்துள்ளார். எனவே பிரித்வி ஷா விற்கு மாற்றாக புஜாரா-வை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அமைகிறது. எனவே இவரை முதல் வரிசையில் இறக்கிவிட்டு புது யுக்தியை கையாளலாம் என தெரியவருகிறது .

இவை மூன்றும் நடக்கவில்லை என்றால் வழக்கம் போல முரளி விஜய் , கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக மீண்டும் ஒருமுறை களமிறங்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் நவ-6 வரை.

Edited by Fambeat Tamil