உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியில் நான்காவதாக அம்பத்தி ராயுடுக்கு அடுத்து இருக்கும் வீரர்கள் யார்?

அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு

பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய கிரிக்கெட் அணியில் 4ஆம் நிலையில் அம்பத்தி ராயுடுக்கு அடுத்த இருக்கும் வீரர்கள் பற்றி ஒரு அலசல்.

2019 உலக கோப்பை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் 4ஆம் நிலையில் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என்று இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பது முக்கியம் இல்லை அவர்களை எப்படி உபயோகித்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம். இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு பிறகு களம் இறங்க போகும் வீரர் யார் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 4ஆம் நிலையில் களம் இறங்கும் வீரர், சூழ்நிலை அறிந்து, விக்கெட்களை பறிகொடுக்காமல் விளையாடும் வீரராக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, 5ஆம் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திரா சிங் தோனி விளையாடுவார். மஹிந்திரா சிங் தோனியின் அனுபவத்திற்கு ஏற்ப அவருடன் ஒரு நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்து கொடுக்கும் வீரராக 4ஆம் நிலை வீரர் இருக்க வேண்டும்.

அம்பத்தி ராயுடு கடந்த ஐ.பி.ல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கி அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் பறக்க விட்டார். வேகப்பந்து வீச்சு மற்றும் சூழல் பந்து வீச்சு இரண்டையும் வெளுத்து வாங்குவார் அம்பத்தி ராயுடு. இந்நிலையில், இவருக்கு அடுத்து 4ஆம் நிலையில் விளையாட தகுதியான வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

கே.எல். ராகுல், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே என பல வீரர்கள் 4ஆம் நிலையில் விளையாடினர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணிக்கு அம்பதி ராயுடு உலக கோப்பை போட்டியில் 4ஆம் நிலையில் விளையாட தேர்ந்து எடுக்கப்பட்டார் . மேலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷேரேயாஸ் ஐயர் இந்த 4ஆம் நிலையில் விளையாடும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ரஹானேவுடன் கே.எல். ராகுலை ஒப்பிடுகையில், ராகுல் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாட சிறந்த வீரராக கருதப்படுகிறார்.

கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

கேதார் ஜாதவ் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்கி வருகிறார். சஹால் மற்றும் குல்தீப் இவர்களால் விக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலையில் கேதார் ஜாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று விடுகிறார்.

கேதார் ஜாதவ்
கேதார் ஜாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கு அடுத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான் என்று பேசி வருகிறார்கள். நிதஹாஸ் கோப்பை இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வங்கதேச அணிக்கு எதிராக வெற்றியை தேடித்தந்தார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

மனிஷ் பாண்டே இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை சிறந்த பங்களிப்பை கொடுக்கவில்லை என்றாலும் இவர் திறமையான வீரர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்தவர்.

மனிஷ் பாண்டே
மனிஷ் பாண்டே

ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட கூடியவர். இந்திய கிரிக்கெட் அணிக்காக மிக சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

ஷேரேயாஸ் ஐயர் நன்கு தடுப்பு ஆட்டம் ஆடி அதன் பிறகு அதிரடியாக விளையாட கூடியவர். ஷேரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு மிக பெரிய பங்களிப்பினை கொடுத்தவர்.

ஷேரேயாஸ் ஐயர்
ஷேரேயாஸ் ஐயர்

அம்பத்தி ராயுடுக்கு ஏதேனும் காயம் அடைந்தாலோ அல்லது உடல் நல குறைவு ஏற்பட்டாலோ 4ஆம் நிலையில் விளையாட அடுத்த மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் அணி தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இவர்களின் விக்கெட்களை இழந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மிகப்பெரிய பேட்டிங் பார்ட்னெர்ஷிப் அமைவது மிகவும் கடினம் தான்.

Quick Links

App download animated image Get the free App now