ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிக முக்கிய டி20 கிரிக்கெட் தொடராக போற்றப்படுகிறது.ஐபிஎல் முழு கிரிக்கெட் உலகத்தையும் என்ற சர்ச்சை கருத்து ஒரு பக்கம் நிலவி வந்தாலும் , இந்திய கிரிக்கெட் அணி முதன்மையான மாற்றத்தினை கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
ஐ.பி.எல் கடந்த சீசனுடன் 11 வருடங்களை நிறைவு செய்துள்ளது. வருடத்திற்கு வருடம் புதிய புதிய அற்புதங்களை ஐ.பி.எல் அளித்து கொண்டுதான் உள்ளது.வெளிநாட்டு ஆடுகளத்திற்கும் இந்திய ஆடுகளத்திற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய ஐ.பி.எல் தொடர் உதவுகிறது.மேலும் வெளிநாட்டு வீரர்கள் ஆசிய ஆடுகளங்களில் விளையாடும் தன்மையை மேம்படுத்தவும் ஐ.பி.எல் தொடர் உறுதுணையாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நிறைய உள்ளுர் இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண உதவுகிறது.இளம் வீரர்கள் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற உதவுகிறது.புதிய முகங்களை காட்டிலும் நிறைய கிரிக்கெட் ஆட்டத்திறன் உள்ள வீரர்களை அடையாளம் காண உதவுகிறது.
தற்பொழுது ஐ.பி.எல் நிறைய வீரர்களை அடையாளம் காண வைத்துள்ளது.அதன்படி இந்திய அணியில் தற்பொழுது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது.ஆனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்னர் பந்துவீச்சு அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்கள்தான தற்பொழுது நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி சிறந்த வீரர்களாக வலம்வந்த வண்ணம் உள்ளனர்.
நாம் இங்கு ஐ.பி.எல் தொடரின் மூலம் கண்டெடுத்த முன்னணி இந்திய பந்துவீச்சாளர்களை பற்றி இங்கு காண்போம்.
#3.வாஷிங்டன் சுந்தர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய குழுவில் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார்.மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 21 முதல் தொடங்குகிறது.16 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் சுந்தர் மட்டுமே ஆஃப்-பிரேக் பௌலர் ஆவர்.
இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கலக்குகிறார்.இவர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கெதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.இதுவரை 1 ஓடிஐ, 7 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2017 ஐ.பி.எல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சார்பாக களமிறங்கி அற்புதமாக பந்து வீச்சை மேற்கொண்டு அணி இறுதிப்போட்டிக்கு தகுதியடைய உதவினார்.இவர் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 2017 ல் 7 ஐ.பி.எல் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 16.90 சராசரி வைத்துள்ளார்.அதன் காரணமாகாவே அவருக்கு 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டது .
இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய சுந்தர் வாய்ப்புகள் இல்லாமல் ஓரம்கட்டப்பட்டார்.கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்த தவறினர் சுந்தர் .
காயம் காரணமாக ஓய்வில் இருந்த சுந்தர் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்தார். ஐ.பி.எல் மூலம் கண்டெடுத்த சிறந்த ஆஃப் பிரேக் பௌளர் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
#2.யுவேந்திர சகால்
ஐ.பி.எல் மூலம் கண்டெடுத்த மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சகால்.சர்வதேச ஓடிஐ,டி20 போட்டிகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.ஒரே சீராக விக்கெட் வீழ்த்துவதில் தேர்ந்தவராக சகால் உள்ளார்.
இவர் 2016 ல் இந்திய அணியில் இடம்பிடித்து இதுவரை 34 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடி ஓடிஐ ல் 56 விக்கெட்டுகளையும்,டி20யில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.இவர் பந்தின் வேகத்தை சரியாக வைத்து பேட்ஸ்மேனின் ஆட்டத்திறனிற்கேற்ப பந்து வீசுவதில் வல்லவர். இதனாலேயே டி20,ஓடிஐ போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடிந்தது.
சகால் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
#1.ஜாஸ்பிரிட் பூம்ரா
இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா, இந்த வரிசையில் முதலிடைத்தை வகிக்க தகுதியுடையவர் ஆவார்.பூம்ரா ஒரு டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசுபவர் ஆவர்.
வெளிநாடுகளிலும் சிறப்பாக பந்து வீசும் திறன் பெற்ற பூம்ராவினை ஐ.பி.எல் தொடரிலிருந்துதான் கண்டெடுத்தார்கள் என்பது மிகையாகது.இவர் 44 ஒருநாள் போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் ,37 டி20 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.அத்துடன் 6 டெஸ்ட் போட்டியில் 28 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இவரைபற்றி இவர் செய்த சாதனைகளே பேசுகிறது.
குஜராத்தை சேர்ந்த பூம்ரா ஐ.பி.எல்லில் மூன்று முறை சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
எழுத்து: போஸின் கமல்
மொழியாக்கம்: சதீஸ்குமார்