கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் வீரர்கள் இரு அணிகளுக்காக விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்த போதிலும் ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்கள் தங்களது நாட்டின் அணியைக் காட்டிலும் சிறந்த பலம் வாய்ந்த அணிகளிலிருந்து அழைப்பு வரும் போது அதனை ஏற்று அந்த நாட்டில் குடியுரிமை பெற்று அந்த நாட்டிற்காகவே விளையாடத் துவங்குகின்றனர். இவ்வாறு சமீபத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கிலாந்து அணியின் அழைப்பினை ஏற்று அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று தற்போது உலககோப்பை தொடர் விளையாடுகிறார். இந்நிலையில் இரு அணிகளுக்காக உலககோப்பை தொடரில் விளையாடியுள்ள வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) இயான் மோர்கன் ( அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து )
அயர்லாந்து அணியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இயான் மோர்கன் தற்போது அசூர வளர்ச்சி அடைந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளங்கிகிறார். இவர் அயர்லாந்து அணிக்காக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் விளையாடினார். சிறப்பாக விளையாடும் இவரின் திறமையைக் கண்டு வியந்த இங்கிலாந்து அணி தங்களது அணியின் மிடில் ஆர்டர் மோசமான நிலையில் இருந்ததால் இவரினை தங்களது அணிக்காக விளையாட வைத்தது. அதில் துவங்கி 2015 மற்றும் 2019 என இரண்டு உலககோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் இவர். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரும் இவரே.
#2) ஜொய்ஸ் ( இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து )
இந்த வரிசையில் மீண்டும் ஒரு அயர்லாந்து வீரர் இடம்பெறுகிறார். ஜொய்ஸ் அயர்லாந்து அணிக்காக ஆரம்ப காலகட்டத்தில் விளையாடி வந்தார். இவரை இங்கிலாந்து ஆணி தங்களது அணிக்காக விளையாட அழைத்ததின் பேரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு விளையாட சென்ற இவர் 2011 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரை அயர்லாந்து அணிக்காக விளையாடினார். இது இவரின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. இதுவரை 78 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 சதங்களும், 16 அரைசதங்களும் குவித்துள்ளார்.
#3) ஆண்டர்சன் கம்மிங்ஸ் ( மேற்கிந்திய தீவுகள் மற்றும் கனடா )
மேற்கிந்திய தீவுகள் அணிகளின் ஆல்ரவுண்டரான ஆண்டர்சன் கம்மிங்ஸ் 90 களில் மேற்கிந்திய அணிகளுக்காக தனது கிரிக்கெட் வாழ்வினை துவங்கிய இவர் 1992 உலககோப்பை தொடரினை விளையாடினார். அதன் பின்னர் ஓய்வினை அறிவித்து கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் 40 வயதான இவர் கனடா நாட்டிற்காக விளையாடினார். இதன் மூலம் இரு அணிகளுக்காக உலககோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார் இவர்.