இரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள்..பாகம்-1

Luke Ronchi Portrait Session
Luke Ronchi Portrait Session

கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை வீரர் ஒருவர் இரு நாடுகளுக்காக விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இருந்த போதிலும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் அணியில் விளையாடும் வீரர்கள் பிற அணிகளிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று அந்த நாட்டிற்கான அணியில் விளையாடத் துவங்குகின்றனர். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27 வீரர்கள் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர். அதில் டி20 போட்டிகளில் இரு அணிகளுக்காக விளையாடி வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#1) மார்க் சாப்மேன் ( நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் )

Mark Chapman
Mark Chapman

மார்க் சாப்மேன் 23 வயதில் இருக்கும் போது நியூசிலாந்து டி 20 சூப்பர் ஸ்மேஷ் தொடரில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த தொடரில் 242 ரன்கள் குவித்தார் இவர். சராசரி 42 மற்றும் ஸ்டரைக்ரேட் 178. ஹாங்காங் நாட்டில் பிறந்திருந்தாலும் அவரது தந்தை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இரண்டு அணிகளுக்கும் விளையாட உரிமை இருந்தது. இவர் ஹாங்காங் நாட்டிற்காக 2 ஒருநாள் போட்டிகளிலும், 19 டி20 போட்டிகளிலும் விளையாடியிருந்தார். அதன் பின்னர் நியூசிலாந்து நாட்டிலிருந்து அழைப்பு வந்த பின்பு அந்த நாட்டிற்காக விளையாடி வருகிறார் இவர். நியுசிலாந்து நாட்டிற்காக இதுவரை 4 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் இவர்.

#2) எட் ஜொய்ஸ் ( இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து )

Ed Joyce
Ed Joyce

அயர்லாந்துக்காக கிரிக்கெட் விளையாடத் துவங்கிய ஜொய்ஸ் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாட அறிமுகம் செய்யப்பட்டார். இங்கிலாந்து அணிக்காக 2 டி20 போட்டிகளிலும், 17 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்தார் இவர். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக உலககோப்பை போட்டியில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு முதல் அயர்லாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார் இவர். அயர்லாந்து அணிக்காக இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 404 ரன்கள் குவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்தார் ஜொய்ஸ்.

#3) லுக் ரோஞ்சி ( ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து )

Luke Ronchi
Luke Ronchi

நியூசிலாந்து நாட்டில் பிறந்த ரோஞ்சி தனது சிறு வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார். எனவே ஆஸ்திரேலிய அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடத் துவங்கினார். 2008 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் 4 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். பின்னர் தன் தாயகம் திரும்பிய அவர் 2013 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார். 2015 உலககோப்பை தொடரிலும் முக்கிய வீரராக களமிறங்கினார் இவர். நியூசிலாந்து அணிக்காக 29 டி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 312 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடினார் இவர். அதன் பின்னர் அந்த வருடமே தனது ஓய்வினை அறிவித்தார்.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications