ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என்பதற்கான மூன்று காரணங்கள்

India Go for the Favorite
India Go for the Favorite

இந்த மாத இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட்,3 ஓடிஐ & டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா & இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த நெருக்கடியை கொடுத்தது.ஆனால் இந்திய அணியால் ஒரு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாமல் டெஸ்ட் தொடரை இழந்தது.

ஆனால் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் தனது டெஸ்ட் ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளையும் மூன்று நாட்களிலேயே முடித்து வைத்து தொடரையும் கைப்பற்றியது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

நாம் இங்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கான முக்கிய மூன்று காரணங்களை பற்றி இங்கு காண்போம்.

#1.வேகப்பந்தின் இயக்கம்

ஸ்டார்க்
ஸ்டார்க்

ஆடுகளம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் சிவப்பு கூகாபுரா பந்து உலகின் பிற பகுதிகளில் பயன்படுத்தும் பந்தினை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.கடந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து வீச்சு மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச மிகவும் சவாலாக அமையும்.அதிக வேகத்திறனுடன் வீசிய வேண்டியதாக இருக்கும்.ரகானே மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணர இந்த மாதிரியான ஆடுகளம் மிகவும் ஏற்றதாக அமையும்.

என்னதான் இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க் ,ஹெய்ஜல் வுட்,பேட் கமின்ஸ் போன்றோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிறிது நெருக்கடி கொடுப்பர் எனத்தெரிகிறது.ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கெதிரான இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடுகையில் இந்திய பேட்டிங் சிறப்பானதாக இருக்கும்.

#2.டேவிட் வார்னர் & ஸ்டிவ் ஸ்மித் இல்லாமை

டேவிட் வார்னர் & ஸ்டிவ் ஸ்மித்
டேவிட் வார்னர் & ஸ்டிவ் ஸ்மித்

முன்னனி 3 ஆஸ்திரேலிய வீரர்களான கேமரன் பென்கராப்ட், டேவிட் வார்னர், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோர் இந்தவருட தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கி மூவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒருவருடம் தடை செய்யப்பட்டுள்ளனர்.

டேவிட் வார்னர், ஸ்டிவ் ஸ்மித் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் இருபெரும் தூண்களாக டெஸ்ட் போட்டியில் செயல்பட்டுவந்தனர். அவர்கள் இல்லாமையால் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்ல மிகவும் எளிதாக முடியும்.

அதெசமயம் ஆஸ்திரேலிய அணி இந்த பால் டேம்பரிங் நிகழ்விற்கு பிறகு முன்னேற சிறிய நெருக்கடி இந்திய அணிக்கு தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு அற்புதமாக உள்ளதால் அவ்வாறு நடைபெறுவது சற்று சந்தேகம் தான்.

#3.தற்போதைய ஆட்டத்திறன்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி
இந்திய அணி கேப்டன் விராட் கோலி

இந்திய அணி கடந்த இரு வெளிநாட்டு தொடர்களில் இங்கிலாந்தில் ஒன்றிலும், தென்னாப்பிரிக்காவில் ஒன்றிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியைத் தவிர மற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது.

இந்திய பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சிறப்பாகவே பந்துவீச்சை மேற்கொண்டனர்.

தற்போதைய சூழலில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவே இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் சாதகமாக அமையும் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.

எழுத்து: ஜிவ்தேஸ் சிம்கா

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links