2. சர்ஃபராஸ் கான்:
மும்பையில் பிறந்த இந்த இளம் வீரர், ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் தொடர்ந்து ஏழு முறை அரைசதத்தை கடந்த வீரர் என்ற சாதனை படைத்ததனால் அனைவராலும் அறியப்பட்டார், சர்ஃபராஸ் கான். இவர் , 2015-ம் ஆண்டு முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடர்ந்து நான்காண்டுகள் விளையாடி வந்துள்ளார் தனது முதல் சீசனில் பெங்களூர் அணி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கினார். 2016ஆம் ஆண்டு சீசனில் 212.90 என்ற மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த போதிலும் பல ஆட்டங்களில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஃபிட்னஸ் காரணமாக அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட இவர் கடந்தாண்டு பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட்டார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியவர் 51 ரன்களை மட்டுமே குவித்தார். பெங்களூர் அணி இவரை வெளியேற்ற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும், இறுதி கட்ட நேரத்தில் அதிரடி காட்டும் இவர், எந்த ஒரு அணிக்கும் ஒரு சிறந்த பின்கள பேட்ஸ்மேனாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த ஐபிஎல்-ல் ஒரு பெரிய தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பு உள்ள வீரராக இவரும் உள்ளார்.
1. அக்சர் படேல்:
ஐபிஎல்-ல் 2014ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்ற அக்சர் படேல், இம்முறை கிங்ஸ் XI அணியில் தக்க வைக்கப்படவில்லை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவரே, கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட ஒரே பஞ்சாப் வீரர். பஞ்சாப் அணி இவரை தக்க வைக்கப்பட்டதன் மதிப்பு 12.5 கோடி. இதற்காக அணி நிர்வாகம் இவருக்கு செலுத்திய தொகை 6.75 கோடியாகும். நடந்து முடிந்த சீசனில் விளையாடி வெறும் 3 விக்கெட்களையும் 80 ரன்களையும் மட்டுமே இவரால் எடுக்க முடிந்தது. இந்த இடதுகை ஸ்பின்னர், இதுவரை ஐபிஎல் தொடரில் பங்குகொண்டு 1765 ரன்களையும் 68 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பலமுறை டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இருப்பினும், இவர் ஒரு சிறந்த டி20 வீரராவார். 2019 சீசனுக்கான ஏலத்தில் இவருக்கு 1 கோடி என்ற அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். நிச்சயம், இவர் பல கோடிகளில் ஏலம் போக வாய்ப்புள்ளவர் என்பதை வரும் 18ம் தேதி நிரூபிப்பார் என எதிர்பாக்கலாம்.