Create
Notifications
New User posted their first comment
Advertisement

ஐபிஎல் தொடர் 2019: புள்ளிப் பட்டியலில்  எந்த இடங்களை அணிகள் பிடிக்கும் என்று ஒரு கணிப்பு

ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யாரு?
ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யாரு?
ANALYST
Modified 05 Mar 2019, 19:32 IST
முன்னோட்டம்
Advertisement

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வருகிற மார்ச் 23ம் தேதி அன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை காரணமாக பெரும்பாலான வீரர்கள் முழு தொடரில் பங்கேற்கா விட்டாலும் இதன் சுவாரஸ்யம் குறையப் போவதில்லை. சென்ற சீசனை விட இந்த சீசனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல புது முகங்களும் இதில் அடங்கும். இந்த சீசனில் அணிகளின் வீரர்கள் பட்டியலை வைத்து எந்தெந்த அணிகள் எந்த இடத்தை புள்ளிப் பட்டியலில் பிடிக்கும் என ஒரு சிறு கணிப்பு. அதை பற்றிய தொகுப்பை காணலாம்.

#8 கிங்ஸ் XI பஞ்சாப் 

கிங்ஸ் XI பஞ்சாப் 
கிங்ஸ் XI பஞ்சாப் 

இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மிகவும் சுறுசுப்பாக இருந்த நிர்வாகம் பஞ்சாப். சென்ற வருட ஐபிஎல் இல் சிறப்பான துவக்கம் அளித்த இந்த அணி இறுதியில் போதிய அளவு சிறப்பாக விளையாடாத காரணத்தால் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சென்ற வருடம் செய்த தவறை சரி செய்து இவ்வருடம் சிறப்பாக விளையாடவேண்டும் என்ற நோக்கில் பல புதுமுக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். வருண் சக்ரவர்த்தி, சாம் குர்ரான், பூரான் போன்ற வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியது. இருப்பினும் இவர்கள் ஐபிஎல் அனுபவம் இல்லாதவர்கள்.  

அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சில் டையை தவிர சொல்லிக்கொள்ளும் படி யாரும் இல்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் கெயில் சொதப்பினால் இந்த அணியை காப்பாற்ற யாரும் இல்லை. அஸ்வின் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் விக்கெட் எடுக்காத பட்சத்தில் எதிரணி அதிக ரன்களை எடுக்க வழிவகுக்கும். இதை கருத்தில் கொண்டு பஞ்சாப் அணிக்கு 8ம் இடம் கணிக்கப்பட்டுள்ளது.

#7 ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் ராயல்ஸ் 
ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் அணியை பொறுத்த வரையில் பெரும்பாலும் உள்ளூர் வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அது இந்தியா மட்டும் இல்லாது மற்ற நாட்டு உள்ளூர் வீரர்களுக்கும் அது பொருந்தும். சென்ற ஆண்டு உள்ளூர் வீரர்களான கெளதம், சாம்சன், ஆர்ச்சர் போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ப்ளே ஆப் வரை சென்றது. சர்வதேச அளவில் பட்லர் மட்டுமே மிக சிறப்பாக விளையாடினார். பென் ஸ்டோக்ஸ்,ஸ்டீவ் ஸ்மித், பட்லர் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் இம்முறை உலக கோப்பை காரணமாக இவர்கள் முழு தொடரில் பங்கேற்பது கடினம். ஆர்ச்சரும் இங்கிலாந்து அணியில் இடம் பேரும் பட்சத்தில் அவரும் பாதியில் வெளியேறிட கூடும். 

ஆதலால் ரஹானே, சாம்சன், கெளதம், உனட்கட் போன்ற இந்திய வீரர்களுக்கே தற்போது பொறுப்பு அதிகரித்துள்ளது. ஸ்மித் இன்னும் காயத்தில் இருந்து முழு உடல் தகுதி பெறாததால், தொடரில் பங்கேற்பதே சந்தேகம்.

#6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

Advertisement
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்ற ஆண்டு அனைவரையும் கவர்ந்த அணி என்றால் கொல்கத்தா தான். புதிய கேப்டன் மற்றும் மாறுபட்ட அணியுடன் களமிறங்கிய இந்த அணி ப்ளே ஆப் வரை சென்றது. குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த அணி முன்னேற்றம் அடைந்தது. பந்துவீச்சை பொறுத்த வரையில் சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் தங்களுடைய சுழற் பந்துவீச்சால் எந்த விதமான பேட்ஸ்மேனையும் திணறடிக்க செய்வர். ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் கார்த்திக் நல்ல பார்மில் உள்ளதால் இம்முறையும் பேட்டிங்கில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் பந்து வீச்சை பொறுத்து வரையில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. இதுவே இவர்களின் பின்னடைவுக்கு காரணமாக அமையலாம்.

#5 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

அனுபவம் மற்றும் திறமைகள் இருந்தும் கோப்பை வெல்ல முடியாத அணியாக இருப்பது பெங்களூரு அணி தான். தனி ஆளாய் போராடி வெற்றி தேடி தருபவர்கள் இருந்தும் சென்ற ஆண்டு 6ம் இடம் மட்டுமே கிடைத்தது. மெக்குல்லம், டி காக், சர்பிரஸ் கான் போன்ற வீரர்களுக்கு பதிலாக சிவம் டுபெ, ஹெட்மையர், போன்ற இளம் வீரர்களை இம்முறை ஏலத்தில் எடுத்துள்ளது. நல்ல ஆல் ரவுண்டர்களை அடக்கிய பெங்களூரு அணி இம்முறை கோப்பை வென்று ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கேப்டன் கோஹ்லி மாற்று டி வில்லியர்ஸ் இம்முறையும் பேட்டிங்கில் நன்றாக விளையாடும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பொறுப்பு குறையும். அதே சமயம் அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட பெங்களூரு, எப்படி எதிரணி வீரர்களை சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து காணலாம்.

1 / 2 NEXT
Published 05 Mar 2019, 19:32 IST
Advertisement
Fetching more content...
App download animated image Get the free App now
❤️ Favorites Edit