ஐபிஎல் தொடர் 2019: புள்ளிப் பட்டியலில்  எந்த இடங்களை அணிகள் பிடிக்கும் என்று ஒரு கணிப்பு

ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யாரு?
ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யாரு?

#4 டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி டேர் டெவில் அணி இம்முறை பெயர் மாற்றம் செய்யபட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியாக விளையாட உள்ளது. சென்ற ஆண்டு தொடக்கம் முதலே தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி, புள்ளி பட்டியலில் இறுதி இடத்தை பிடித்தது. இந்த வருடம் ஒரு புது அணியாக களமிறங்க உள்ள டெல்லி, இளம் இந்திய வீரர்களை கொண்டதாக உள்ளது. பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களுடன் தவானும் இணைந்துள்ளார். இவர் டெல்லி அணியை சேர்ந்தவர் என்பதால் அணிக்கு கூடுதல் பலம். அதே போன்று அக்சார் பட்டேல் இன் வருகை பந்து வீச்சிலும் உதவியாக இருக்கும். அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் உடைய இந்த அணி இம்முறை ப்ளே ஆப் செல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது.

#3 மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் 
மும்பை இந்தியன்ஸ்

எதிர்பார்த்த அளவு சென்ற ஆண்டு விளையாடாத மும்பை அணி ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ரோஹித் சர்மா, பொல்லார்ட் போன்ற அனுபவ வீரர்கள் பார்ம் இல்லாமல் தவித்தது தான். இருப்பினும் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்து கொண்டனர். ட்ரான்ஸ்பெர் விண்டோஸ் இல் பெங்களூரு அணியிடம் இருந்து டி காக் கை பெற்றுக்கொண்டது. இவரது அதிரடியான அனுபவம் நிச்சயம் மும்பை அணிக்கு கைகொடுக்கும். நடந்து முடிந்த ஏலத்தில் யுவராஜ் சிங் மற்றும் மலிங்கா ஆகிய வீரர்களையும் வாங்கியது. பந்துவீச்சை பொறுத்த வரையில் பாண்டியா சகோதரர்கள் மற்றும் பும்ரா பாத்துக்கொள்வார்கள். ஆதலால் இம்முறை மும்பை அணி ப்ளே ஆப் செல்வது சுலபமான ஒன்று.

#2 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

எல்லா வருடமும் சிறப்பாக விளையாட கூடிய அணியாக உள்ளது சென்னை அணி. பல விமர்சனங்களை தாண்டி வழக்கம் போல் சிறப்பாக விளையாடிய சென்னை வீரர்கள் கோப்பை வென்று சாதித்தனர். டு பிளெஸிஸ், பிராவோ, வாட்சன் என்று 30 வயதுக்கு மேல் உடைய வீரர்கள் இருந்தும் அனைவரும் அனுபவத்தை பதிவு செய்தனர். குறிப்பாக ராயுடு மற்றும் வாட்சன் தொடக்க வீரர்களாக பெரும்பாலான ஆட்டங்களில் ரன்கள் குவித்தனர். மேலும் தோனியின் பார்மும் ஒரு காரணம். தக்க சமயத்தில் பார்முக்கு மீண்ட தோனி வழக்கம் போல் கேப்டனாகவும் சாதித்தார். சென்னை அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் ஓரளவுக்கு பின் தங்கியே உள்ளது. இதனை இம்முறை சரிசெய்யா விடில் எதிரணிக்கு லாபமாக அமைய கூடும்.

#1 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்
சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்

கடந்த 3 முதல் 4 வருடங்களாக மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது ஹைதராபாத் அணி. சென்ற ஆண்டு வார்னர் இல்லாத போதும் இறுதி போட்டி வரை சென்று அசத்தியது. சென்னை அணியின் வாட்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருந்தால், நிச்சயம் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றிருக்க கூடும். பந்து வீச்சில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணி எந்த இலக்கையும் தற்காத்து கொள்ள கூடியது. ட்ரான்ஸபெர் விண்டோஸ் மூலம் விஜய் ஷங்கர், நதீம், அபிஷேக் சர்மா போன்ற சிறந்த ஆட்டக்காரர்களை எடுத்துள்ளனர். அதே போன்று ஏலத்தில் பேர்ஸ்டோவ் மற்றும் கப்டில் ஆகிய வீரர்களையும் வாங்கியது. சிறந்த டி20 பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இந்த அணியின் பேரும் பலம். ஆதலால் இம்முறையும் ப்ளே ஆப் சென்று இறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் உள்ளது ஹைதெராபாத் அணி

PREV 2 / 2
Edited by Fambeat Tamil