ப்ரித்வி ஷா காயம்! முதல் டெஸ்டிலுருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

காயத்தால் அவதிப்பட்ட ப்ரித்வி ஷா
காயத்தால் அவதிப்பட்ட ப்ரித்வி ஷா

என்ன நடந்தது ?

மிக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாகவே இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக ப்ரித்வி ஷா காயம் என்ற செய்தி அமைந்துள்ளது. இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா கணுக்கால் காயத்திற்கு உள்ளானார். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1 அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பயிற்சி ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று ஒரு கேட்ச் பிடிக்க முயன்றபோது ப்ரித்வி ஷா தனது இடது கணுக்கால் திசை திரும்பவே, களத்தில் வீழ்ந்து வலியால் துடித்தார். பின்பு இந்திய மருத்துவ நிபுணர்கள் ப்ரித்வி ஷாவை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.

இதனிடையே, பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில்

“காலையில் ஷா மெடிக்கல் ஸ்கேனுக்கு உள்ளாக்கப்பட்டார், மருத்துவ அறிக்கையில் பக்கவாட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக ரிசல்ட் வந்துள்ளது, இதனால் ஷா வரும் முதல் டெஸ்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷா குணமடைய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் மேலும் அவர் சீக்கிரம் குணமடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிண்ணனி :

ஷா அணியில் இடம் பெற்று வெறும் இரண்டு டெஸ்டுகளே ஆடியுள்ள நிலையில்,அப்போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அணியில் உள்ள மற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல், இரண்டாம் தொடக்க ஆட்டக்காரராக களம் காண போட்டி நிலவிவந்தது.இந்த 19 வயது இளம் வீரர் (ஷா) அணி பேட்டிங் வரிசையில் முதல் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். எதிர்பாராதவிதமாக மணிக்கட்டு ஸ்பின்னர் டேனியல் பால்லின்ஸ் சுழலில் வீழ்ந்தார் ஷா.

நிகழ்வுகளின் மையக் கரு

இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் செஷனில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1-ன் தொடக்க பேட்ஸ்மேனான மாக்ஸ் பிரையண்ட் அஸ்வின் போட்ட பந்தை காற்றில் அடித்தார்,டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ப்ரித்வி ஷா காற்றிலிருந்த பந்தை பிடிக்க முற்படும்போது இடது கணுக்கால் திசைதிரும்பியது. எனவே வலி தாங்காமல் அக்கணமே கீழே விழுந்தார் ஷா.

இடது கணுக்கால் திசைதிரும்பியது
இடது கணுக்கால் திசைதிரும்பியது

இந்திய அணி பிசியோ பேட்ரிக் பர்ஹார்ட் ப்ரித்வி ஷாவிடம் விரைந்தார்.ஷா கால்களுக்கு வலி ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அவரை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.இதனை கண்ட கேப்டன் கோலி வருத்தத்துடன் ஷாவின் நலம் விசாரிக்க களத்தில் இருந்து வெளியேறினார். பின்பு ஷா மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல்வேறு விதமான ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.

அடுத்தது என்ன ?

ஷா இல்லாததால், முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக வரும் முதல் போட்டியில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஷாவிற்கு பதிலாக எந்த ஒரு வீரரையும் மாற்று வீரராக பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்திய அணி நிர்வாகம் தற்போது ஷா குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலோ அல்லது ஷா குணமடைய தாமதம் ஏற்பட்டாலோ மயங்க் அகர்வால் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது

Quick Links