ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க சென்றது . டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது அதன் பின்பு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் பலபரிச்சை நடத்தவுள்ளன.
4 போட்டிகளை கொண்ட இத்தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 6 ஆம் நாள் அடிலெய்டில் நடக்கவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை, இருப்பினும் இம்முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதானதல்ல. தொடரின் முதல் போட்டிக்கு முன்பே இளம் வீரர் பிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் அடைந்தார். இருப்பினும் விஜய் சதம் அடித்து ஆறுதல் அளித்தார். பேட்டிங் வரிசையில் கோலி, ரஹானே,விஜய் மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் இருந்தாலும் பும்ரா,ஷமி, இஷாந்த் மற்றும் உமேஷ் வேகபந்துவீச்சில் பலம் சேர்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின் ஜடேஜா மற்றும் குள்தீப் போன்ற வீரர்கள் இருப்பது கூடுதல் பலமே.
ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற வீரர்களுக்கு ஐசிசி விதித்த தடை காரணமாக பங்கேற்க முடியாத காரணத்தால் அந்த அணியின் பேட்டிங் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. இருப்பினும் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் லியான் போன்ற பந்துவீச்சாளர்கள் இருப்பது பலம் சேர்க்கிறது.
இவற்றில் இந்திய அணிக்கான முதல் போட்டியின் சாத்தியமான 11 பேர் கொண்ட அணியை பற்றி பார்க்கலாம்.
#1 டாப் ஆர்டர் (1-3):
ராகுல், விஜய் மற்றும் புஜாரா
பிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார் இதன் மூலம் விஜய் அவரிடத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து தொடரில் நீக்கப்பட்ட இவர், கவுண்டி போட்டியில் தனது ஆட்டத்தை நிரூபித்து அணியில் மீண்டும் இணைந்தார். பயிற்சி போட்டியில் சதம் அடித்து பார்மில் உள்ள இவர் சிறப்பாக செய்யப்படுவர் என எதிர்பார்க்கலாம்.
ராகுல் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடரில் முதல் சில போட்டிகளில் சொதப்பிய இவர் கடைசி போட்டியில் சதமடித்து அசத்தினர், இருப்பினும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சொதப்பினார். பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்த இவர் முதல் போட்டியிலும் தனது ஆட்டத்தை தொடரலாம். அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். புஜாரா தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
#2 மிடில் ஆர்டர் (4-6)
கோலி, ரஹானே, விஹாரி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன கோலி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய மங்கு வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பல சதம் அடித்து பார்மில் இருக்கும் இவர் ஆஸ்திரேலியாவிலும் தனது ரன் வேட்டையை தொடருவார் என நம்பலாம். இவரின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பல வியூகங்களை அமைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் துணை கேப்டன் ஆன ரஹானே வெளி நாடுகளில் ரன் சேர்ப்பது வழக்கம். வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் இவர் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்தில் சற்று சொதப்பிய இவர் ஆஸ்திரேலியாவில் பார்மிர்க்கு திரும்பலாம் , இவர் நம்பர் 5 இடத்தில் ஆடுவதன் மூலம் விஹாரி 6 ஆவது இடத்தில் களமிறங்கலாம். விஹாரி பந்தும் வீசுவார் என்ற காரணத்தினால் ரோகித்தை பின்னுக்கு தள்ளி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
#3 விக்கெட்கீப்பர் (7)
ரிஷப் பான்ட்
விக்கெட்கீப்பராக ரிஷப் பான்ட் விளையாடுவர் என்று தெரிகிறத . இங்கிலாந்து தொடரில் சதம் அடித்து அசத்திய இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இரண்டு 90கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வாரென நம்பலாம். அணியில் உள்ள மற்றொரு கீப்பராக பார்த்திவ் படேல் இடம் பெற்றுள்ளார், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினமே.
#4 சுழற்பந்துவீச்சாளர் (8)
அஸ்வின்
அடிலெய்டு பிட்ச் ஆனது முதல் மூன்று நாட்களுக்கு பின்பு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் ஒத்துழைக்கும் என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆடலாம். அஸ்வின், ஜடேஜா அற்றும் குள்தீப் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பினும் அஸ்வின் ஆஸ்திரேலியா வில் ஆடிய அனுபவம் உள்ளதால் அஸ்வின் வாய்ப்பு பெறுவார். பேட்டிங்கில் ரன்களையும் சேர்ப்பார். எனவே இவர் இருப்பது அணிக்கு பலமே.
#5 வேக பந்துவீச்சாளர்கள் (9-11)
பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தனது டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பும்ரா அதன் பின்பு பங்கேற்ற 6 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தி வந்தார். இவருக்கு பக்க பலமாக ஷமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அணியில் உமேஷ் புவனேஷ்வர் போன்ற வேக பந்துவீச்சாளர்கள் இருப்பினும் இஷாந்த் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் நிறைய உள்ளது, எனவே வேகபந்துவீச்சில் இஷாந்த் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்திய அணி எப்பொழுதும் இல்லாதது போல் இம்முறை விராட் கோலியின் தலைமையில் வேகபந்துவீச்சு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது, எனவே இந்திய அணி இத்தொடரை வெல்லும் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.