பீஎஸ்எல் (PSL) தொடரில் முதன் முதலாக களம் இறங்கபோகும் அதிரடி வீரர்

Pravin
PSL2019 ALL TEAM CAPTAIN'S
PSL2019 ALL TEAM CAPTAIN'S

பாகிஸ்தான் பிரிமியர் லீக் என்று கூறப்படும் (PSL) டி-20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போன்று நடைபெறும் மிகப்பெரிய டி-20 கிரிக்கெட் தொடர். இந்த தொடர் மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனாக நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடர் ஒரு மாத காலம் நடைபெறும் டி-20 தொடர். இந்த தொடரில் 30 லீக் போட்டிகளை கொண்டது. இந்த தொடரில் குவெட்டா கிளாடியேட்டர், காராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், லாகூர் க்வாலன்டர்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட், பெஷாவர் ஜல்மி ஆகிய ஆறு அணிகள் விளையாடுகின்றனர். இந்த தொடர் தூபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களும் பாகிஸ்தான் அணி இளம் வீரர்களும் பங்கேற்கின்றனர். அதே போன்று மற்ற நாட்டு நட்சத்திர வீரர்களும் விளையாடுகின்றனர். பீஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் அணியின் விபரங்கள் பின்வருமாறு காண்போம்.

#1 இஸ்லாமாபாத் யுனைடெட்

நடப்பு சாம்பியன்ஸ் இஸ்லாமாபாத் அணி இது வரை நடைபெற்று மூன்று சீசன் இரண்டு முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. முதல் மற்றும் மூன்றாவது சீசனில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற அணி, இந்த அணியில் இந்த சீசனில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். இந்த அணியின் கேப்டனாக முகமத் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் முக்கிய வீரர்கள்: சாதாப் கான், ஃபாஹிம் அஷ்ரப், ஹஸ்ஸின் தாலட், ரோஞ்சி, ஆஷிப் அலி.

#2 லாகூர் க்வாலன்டர்ஸ்

லாகூர் க்வாலன்டர்ஸ் அணி இதுவரை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றதில்லை. எனினும் அதிரடி வீரர்களை அதிகம் கொண்ட அணி லாகூர் க்வாலன்டர்ஸ் அணி. இந்த அணி கேப்டனாக முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முக்கிய வீரர்களாக: பக்கர் ஜமான், ஏபிடி டிவில்லியர்ஸ், பிரன்டன் டைய்லர், ஷாஹின் அப்ரிடி, டுவீச்.

#3 கராச்சி கிங்ஸ்

கராச்சி கிங்ஸ் அணி இதுவரை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றதில்லை. கராச்சி அணி கேப்டன் இமாத் வாசிம் செயல்பட்டு வருகிறார். கராச்சி அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னனி வீரர்கள் விளையாடுகிறார். கராச்சி அணியின் முக்கிய வீரர்கள்: முக்மது அமீர், பாபர் ஆஷாம், உஸ்மான் சன்வாரி, காலின் முன்ரோ, இமாத் வாசிம், ரவி போபாரா.

#4 முல்தான் சுல்தான்ஸ்

முல்தான் அணி கேப்டனாக ஷோயப் மாலிக் தேர்வு செய்யபட்டுள்ளார். முல்தான் அணி ஸ்டீவ் ஸ்மித் பதில் ஆன்ரே ரஸ்ஸால் தேர்வு செய்து அணியில் சேர்க்கபட்டுள்ளார். முக்கிய வீரர்கள்: மாலிக், ரஸ்ஸால், ஷாகித் அப்ரிடி, முகமது இர்பான், முகமது அப்பாஸ், கிரிஸ்டியன்.

#5 பெஷாவர் ஜல்மி

பெஷாவர் ஜல்மி அணி இரண்டாவது சீசனில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. மூன்றாவது சீசனில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த பெஷாவர் அணி கேப்டன் டேரன் சமி. இந்த அணியின் முக்கிய வீரர்கள்: டேரன் சமி, வாஹாப் ரியஸ், கம்ரன் அக்மல், கிரேன் பெல்லார்ட், ஆன்ரோ ப்ளச்சர்.

#6 குவாட்டா கிளாடியேட்டர்

குவாட்டா கிளாடியேட்டர் அணி இரண்டு முறை இறுதி போட்டிக்கு சென்று இரண்டிலும் தோல்வி அடைந்தது. குவெட்டா அணி கேப்டன் ஷப்ராஸ் அகமத். இந்த அணியின் முக்கிய வீரர்கள்: ஷப்ராஸ் அகமது, வாட்சன், டுவாய்ன் ப்ராவோ, அன்வர் அலி, தன்வீர்.

AB De villers
AB De villers

இந்த சீசினில் அதிரடி நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் முதன் முதலாக விளையாட உள்ளார்.