பாகிஸ்தான் பிரிமியர் லீக் (PSL) தொடர் மிக பிரமாண்டமாக தற்போழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நான்காவது சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடர் தற்பொழுது துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களும் இளம் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மற்ற நாட்டு அதிரடி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று இந்த தொடரின் மூன்றாவது போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெஷாவர் ஜல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கம்ரான் அக்மல் மற்றும் ஆன்ரே ஃப்லெட்சர் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே தடுமாறிய ஃப்லெட்சர் 1 ரன்னில் முகமது இர்பான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மக்சூட் நிலைத்து விளையாடினார். தொடக்க வீரராக களம் இறங்கிய கம்ரான் அக்மல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கம்ரான் அக்மல் 49 ரன்னில் முஹமது நாவஸ் பந்தில் அவுட் ஆகி பெவுலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மிஷ்பா உல் ஹக் நிலைத்து விளையாடினார். மக்சூட் 26 ரன்னில் குலாம் முடஸ்ஸர் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கிரேன் பெலார்ட் 3 ரன்னில் முஹமது நவாஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் கண்ட லயம் டாஸன் கடைசி வரை அவுட் ஆகாமல் 21 ரன்னில் களத்தில் இருந்தார். மிஷ்பா உல் ஹக் 49 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 155 ரன்களை அடித்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய பெஷாவர் ஜல்மி அணியில் தொடக்க வீரரகளாக வாட்சன் மற்றும் அஹ்மத் ஷெஹ்ஸாத் இருவரும் களம் இறங்கினர். அஹ்மத் ஷொஹ்ஸாத் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனை அடுத்து களம் இறங்கிய ரிலி ருஸோ சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். வாட்சன் 19 ரன்னில் உமைத் ஆஷிப் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய உமர் அக்மல் நிலைத்து விளையாடினார். இதனை அடுத்து ரிலி ருஸோ 19 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் ஷப்ராஸ் அகமது நிலைத்து விளையாடினார். நிலைத்து விளையாடி உமர் அக்மல் அரைசதம் கடந்தார். ஷப்ராஸ் 37 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய டுவைய்ன் ஸ்மித் கடைசி வரை களத்தில் இருந்தார். உமர் அக்மல் 75 ரன்கள் எடுத்த நிலையில் பெஷாவர் அணி வெற்றி இலக்கை அடைந்தது. பெஷாவர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகானாக உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டார்.