இன்று ரயில்வே அணிக்கு எதிராக நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் புஜாரா 61 பந்துகளில் சதமடித்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். முதலில் ஆடிய சௌராஷ்டிரா அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. ரயில்வே அணி 20 ஆவது ஓவரில் 190 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரயில்வே அணிக்காக தேவ்தார் 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார், இதில் 8 நான்கும் 2 சிக்சர்களும் அடங்கும். புஜாராவின் முதல் சதம் தோல்வியில் முடிந்தது சற்றே அவருக்கு வருத்தம் அளித்திருக்கும்.
இன்று சதம் அடித்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல், லிஸ்ட் ஏ போட்டியில் 150 ரன்களுக்கு மேல், மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்கு மேல் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதில் முக்கிய பங்கு ஆற்றியவர் புஜாரா. இன்று ரயில்வே அணிக்கு எதிராக நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் புஜாரா 61 பந்துகளில் சதமடித்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
முதல்தர கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் லிஸ்ட் ஏ போட்டியில் 150 ரன்களுக்கு மேல் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்கு மேல் அடித்த மற்ற மூன்று வீரர்களைப் பற்றி காண்போம்.
1. விரேந்தர் சேவாக்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் சேவாக். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு சதங்களை அடித்துள்ளார்.
2. ரோகித் சர்மா:
இந்திய அணியின் துணை கேப்டன் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சதங்களை அடித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும். 2009ஆம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அவர் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. மயங்க் அகர்வால்:
உள்ளூர் கிரிக்கெட்டில் பலதரப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ள மயங்க் அகர்வால், 2017 ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்தார். மேலும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 176 ரன்களை குவித்தார். டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த ஒரு சதம் 2013-ம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் ஐதராபாத்திற்கு எதிராக வந்தது. மயங்க் அகர்வால் இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய திறமையை நிரூபித்து டெஸ்ட் தொடரில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.