பவர் பிளேயால் பல போட்டிகளை இழந்துள்ளோம்: அஷ்வின்

கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஷ்வின்
கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஷ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை, இதன் காரணமாக ஏறத்தாழ இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றனர். தோல்விக்கு பிறகு கிங்ஸ் XI அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஷ்வின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் அணியில் காயம் காரணமாக மிஸ்டிரி ஸ்பின்னர்கள் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. வருண் சக்ரவர்த்தி (விரல்) மற்றும் முஜீப்-உர்-ரஹ்மான் (தோள் பட்டை) காயங்கள் காரணமாக தொடரின் பெரும் பகுதிகளை தவறவிட்டார். கிங்ஸ் XI அணி ஏலத்தில், தமிழக அணியின் மிஸ்டிரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை அதிக விலை கொடுத்து வாங்கியது. ஆனால் அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.

ஆமாம், இந்த ஆண்டு பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, என அஸ்வின் கூறினார். கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஒரு சில பிரச்சனைகளை தொடர்ந்து சந்திதுள்ளோம், எங்களின் விருப்பம் ஒன்றாக இருந்தது, ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. ஒரு சில வீரர்களை [ஏலத்தில்] எடுத்தோம், அவர்கள் காயமடைந்தனர், அதனால் எந்த திட்டத்தில் விளையாட விரும்பினோமோ அப்படி விளையாட முடியாமல் போனது.

இந்த வருடம் எங்களின் முக்கிய பலவீனமாக பவர் ப்ளே இருந்தது. சில சமயம் பேட்டிங்கிலும், சில சமயம் பந்து வீச்சிலும் கோட்டை விட்டுள்ளோம். அடுத்த தொடரில் அதை சரி செய்து விடுவோம். கடந்த இரண்டு வருடமாக நாங்கள் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களை நம்பியே உள்ளோம். இதனால் அவர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. இருந்த போதிலும் கெய்ல் மற்றும் ராகுல் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

உலகத் தர வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உங்களிடம் இருக்கும் போது, நீங்கள் நிச்சயமாக அதற்கான பலன் பெறுவீர்கள், என அஸ்வின் கூறினார். நான் சொன்னதுபோல், எங்களுக்கு பவர் பிளே பெரும் பிரச்சனைகளில் ஒன்று, நாங்கள் வெற்றி பெற்ற பெரும்பாலான போட்டிகள் நடு ஓவர்கள் மூலம் அல்லது சில நேரங்களில் இறுதியில் டெல்லி அணிக்கெதிராக நம்பமுடியாத நிகழ்ச்சிகளால் முகம்மது சமி, சாம் கர்ரான் ஆகியோரால் வென்றோம்.

கிங்ஸ் XI அணியின் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ஆண்டுரு டை இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பானதாக இல்லை, கடந்த வருடம் அதிக விக்கெட் விழ்த்தியதர்கான பர்பிள் தொப்பி வெற்றியாளர். இந்த வருடம் வெளிநாட்டு வீரர்களில் கெய்ல் தவிர யாரும் பெரிய அளவில் சோபிக்க வில்லை.

ஆண்டுரு டை
ஆண்டுரு டை

கடந்த வருடத்தை போல அடுத்த வருடமும் ஆண்ட்ரு டை சிறப்பாக பந்து வீசுவார் என நம்புகிறேன். இது ஒரு பந்து வீச்சாளருக்கு இக்கட்டான காலம் இதை கடந்து வருவார். மிடில் ஆர்டர் பேட்டிங் எங்களின் பலவீனமாக இருக்கிறது இதையும் அடுத்த வருடம் சரி செய்து மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னைக்கு எதிரான போட்டியில் எந்த அழுத்தமுமின்றி நல்ல கிரிக்கெட் விளையாடுவோம் என கூறினார்.

Quick Links

Edited by Fambeat Tamil