20 ஓவர் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுரேஷ் ரெய்னா. மாநிலங்களக்கு இடையேயான சையது முஸ்தாக் கோப்பை டி 20 தொடர் நடந்து வருகிறது. இந்த சாதனையை நடந்து கொண்டிருக்கும் சையது முஸ்டாக் கோப்பை டி20 தொடரில் உத்திர பிரதேசத்துக்காக விளையாடும் ரெய்னா புதுச்சேரிக்கு எதிரான போட்டியில் படைத்தார்.
சுரேஷ் ரெய்னா இந்தியாவின் தலைசிறந்த டி 20 பேட்ஸ்மேனில் ஒருவர். இவர் டி 20யில் 176 ஐபிஎல் போட்டிகளும் 78 சர்வதேச டி 20 போட்டிகளும் ஆடியுள்ளார்.உள்ளுர் போட்டிகளை சேர்க்காமல் மட்டும் ரெய்னா 6500க்கும் மேல் ரன் அடித்துள்ளார். அனைத்து வகையான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார் சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் அதிக ரன் விளாசிய வரிசையில் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். ரெய்னாவை "மிஸ்டர் ஐ பி எல்" என்று செல்லமாக அனைவராலும் அழைக்கபட இதுவும் ஒரு காரணம், விளையாடிய அனைத்து ஐ பி எல் போட்டிகளிலும் 350 ரன்னுக்கு மேல் அடித்த ஒரே வீரர், சென்னை சூப்பர் கிங்ஸின் சின்னதல என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கபடுபவர். ஐ பி எல் லில் முதல் எட்டு சீசனில் ஒரு மேட்சை கூட ஆட தவறியதில்லை, ஆனாலும் இந்திய அணிக்கு தேர்வாகத நிலையில் உள்ளுர் போட்டியான சையது முஸ்தாக் கோப்பை டி20 தொடரில் விளையாடி வருகிறார் ரெய்னா.
சாதனை மைல்கல்
உத்திர பிரேதேசம் மற்றும் புதுச்சேரி அணிகள் இன்று எதிர் கொண்டன.
உத்திர பிரதேசத்துக்காக விளையாடிய ரெய்னா இந்த மைல்கல்லை எட்டினார். 300 மேட்சுகள் ஆடிய ரெய்னா மொத்தம் 8001 ரன்கள் குவித்துள்ளார். 8000 ரன் குவித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகளவில் 6 ஆவது பேட்ஸ்மென் என்ற பெருமையை பெற்றார் ரெய்னா..
மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 269 மேட்ச்களில் 12298 ரன்கள் குவித்து முதலிடத்திலும் அவரை தொடர்ந்து நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 370 ஆட்டங்களில் 9922 ரன் குவித்து இரண்டாம் இடத்திலும் உள்ளார். அவரை தொடர்ந்து மேற்கிந்திய தீவை சேர்ந்த கிரன் பொல்லார்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் மாலிக் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் உள்ளனர்.
இது மட்டுமில்லாமல் இன்று நடந்த போட்டியில் இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார் ரெய்னா. 300 டி 20 போட்டிகள் ஆடிய இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமை தான் அது. முதலாவது இடத்தில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கூல் மகேந்திரசிங் தோனி, அடுத்ததாக ரோகித் சர்மா 299 ஆட்டங்கள் ஆடியுள்ளார்.
இப்போது நடந்து வரும் போட்டியை ரெய்னா சிறப்பாக பயன்படுத்தி மீண்டும் தேர்வாளர்களுக்கு நம்பிக்கையை கொண்டு வரவேண்டும், அதுமட்டுமில்லாமல் அடுத்த வரவிருக்கும் ஐ பி எல் போட்டிக்காக தயாராக வேண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க ரெய்னா மீண்டும் பழைய பார்மை கொண்டு வர வேண்டும். சமீபமாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாண்டி ரோட்ஸ் வெளியிட்ட முதல் ஐந்து சிறந்த பீல்டர்களில் சுரேஷ் ரெய்னாவை முதலிடத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.