#3.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்கள், கேப்டவுன், 2016:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி 167/4 என்ற நிலையில் இருந்தபொழுது களம் கண்ட பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்து தென்ஆப்ரிக்க அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். 198 பந்துகளில் 258 ரன்கள் விளாசினார். இதில் 30 பவுண்டரிகளும் 11 சிக்சர்கள் அடங்கும். ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக சிகசர்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் வாசிம் அக்ரமிற்கு (12 சிக்ஸர்) பின் இரண்டாவது இடத்தில் உள்ளார், பென் ஸ்டோக்ஸ்.
#2. நியூஸிலாந்துக்கு எதிராக 84* ரன்கள் , 2019 ஜூலை, லார்ட்ஸ்:
இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை யாராலும் மறக்க இயலாது. 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி 100 ரன்கள் குவித்தது. ஆனால், பட்லர் மற்றும் அதற்குப் பின் வந்த வோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் சென்றது. இருப்பினும் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது, சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.
#1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 135* ரன்கள், ஆகஸ்ட் 2019:
இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் முன்னிலை பெற்றது. ஏற்கனவே, இந்த தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்து வந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 358 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஷஸ் தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இங்கிலாந்து அணி.
359 ரன்கள் எனும் கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறந்த தொடக்கத்தை அளித்தனர். ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஜோ டென்லி ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.மீதம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்து நிலையில் இங்கிலாந்து வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டன. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் களத்தில் இருந்தனர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பென் ஸ்டோக்ஸ் , இங்கிலாந்து அணியை திரில் வெற்றி பெறச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு சிறந்த இன்னிங்சாக பென் ஸ்டோக்ஸின் இந்த இன்னிங்ஸ் பார்க்கப்படுகிறது.