2019 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இளம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தற்போது தனது முழு கவணத்தையும் உலகக் கோப்பைக்கு செலுத்தியுள்ளார். தனது இளம் வயதிலேயே அதிக சாதனைகளை படைத்துள்ள ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்கிறார். ரஷீத் கான் உலகக் கோப்பையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தான் வைத்திருக்கும் தந்திரமான பௌலிங் வித்தை பற்றி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 டி20 பௌலர் ரஷீத் கான் இவ்வருட ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறியிறுந்தாலும், இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் அதிரடி பௌலிங்கை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு அணியின் பேட்ஸ்மேன்களும் ரஷீத் கான் வீசும் 4 ஓவரில் தங்களது விக்கெட்டுகளை விட கூடாது என்ற நோக்கில் விளையாடி வருகின்றனர். இருப்பினும் 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரஷீத் கான். அத்துடன் 6.38 என்ற பிரம்மிக்க வைக்கும் எகானமி ரேட் தன்வசம் வைத்துள்ளார். ரஷீத் கான் ஐபிஎல் தொடரில் எவ்வளவு திறமையான பௌலர் என்பது இந்த எகானமி ரேட்டை பார்க்கும் போதே நமக்கு தெரியும்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் சுற்றில் ரஷீத் கான் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 15வது ஓவரில் இவர் வீசிய பௌலிங் மூலம் ஆட்டத்தின் போக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் அதற்குபின் வீசப்பட்ட பௌலிங்கை ரிஷப் பண்ட் துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தற்போது எதிர்வரும் 2019 உலகக் கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் மிகப்பெரிய சர்வதேச தொடரில் தனது பெயரை பதிவு செய்யும் நோக்கில் உள்ளார். உலகக் கோப்பையில் விராட் கோலியை எவ்வாறு சமாளிப்பிர்கள் என ரஷீத் கானிடம் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு வீசும் அனைத்து பந்தையும் மிகவும் சரியாகவும் & சிறப்பாகவும் வீசுவேன் என தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு தான் வைத்திருக்கும் பௌலிங் திட்டம் பற்றி "ஸ்போர்ட்ஸ் ஸ்டார்" பத்திரிக்கைக்கு ரஷீத்கான் கூறியதாவது:
" விராட் கோலியால் விளையாட முடியாது என்ற ஷாட்-கள் இதுவரை கிரிக்கெட்டில் இல்லை. இவரது பலவீனத்தை நான் எப்பொழுதும் பார்த்தது இல்லை. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சுழற்பந்து வீச்சாளராக நான் வீசும் அனைத்து பந்தையும் சிறப்பாக வீச வேண்டும். இதன்மூலமே அவரை கட்டுபடுத்த இயலும்.
மேலும் தான் உலகக் கோப்பையில் பங்கேற்க மட்டும் இங்கிலாந்து செல்லவில்லை எனவும், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்து தன் நாட்டிற்கு பெருமை சேர்க்கவே செல்கிறேன் என தனது நேர்காணலை முடித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 2019 உலக கோப்பை தனது முதல் போட்டியில் ஜீன் 1 அன்று ஆஸ்திரேலிய அணியை பிரிஸ்டோல் நகரில் சந்திக்க உள்ளது.