இலங்கை அணியானது வெற்றிகரமாக வங்கதேசத்திற்கு எதிரான தெடரை கைப்பற்றிய நிலையில் தற்போது பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. உலககோப்பை தொடரில் இலங்கை அணியின் மேசமான ஆட்டத்தின் மூலம் அணியின் பயிற்ச்சியாளரான சன்டிகா அதூர்ஷின்ஹா-வை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்தன. இந்நிலையில் இலங்கை அணி நிர்வாகம் புதிய பயிற்ச்சியாளரை நியமித்துள்ளது. இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காண்போம் .
ஆரம்ப காலகட்டங்கள் முதல் 2015 உலககோப்பை வரை இலங்கை அணி உலக கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த அணியாக விளங்கியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா என அனைத்து முன்னணி அணிகளுக்கே சவால் விடும் அணியாக திகழ்ந்தது. 2011 உலககோப்பை தொடரில் கூட இறுதிப் போடடிவரை முன்னெறியிருந்தது 2015 உலககோப்பையிலும் சிறப்பாக விளையாடியிருந்தது.
ஆனால் அதன் பின்னர் இலங்கை அணியானது தனது இயல்பான தன்மையை இழந்தது. இதற்கு காரணம் அணியில் மூத்த வீரர்களான சங்ககரா, ஜெயவர்த்தனே மற்றும் முரளிதரன் ஆகியோர் ஓய்வு பெற்றது. அதுமட்டுமின்றி சரியான தலமையில்லாத இந்த அணி இளம் வீரர்களை வைத்துக்கொண்டு பெரிதாக எதுவும் செய்யவில்லை. பல போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு அழைத்து சென்றது. இதே வேகத்தில் உலககோப்பையை எதிர்கொண்டது இலங்கை அணி. அங்கும் சொதப்பி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இதனால் அணியின் பயிற்ச்சியாளரை மாற்றும் நிபந்தனைக்கு தள்ளப்பட்டது அணி நிர்வாகம் . இதன் முடிவில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில் அந்த தொடரில் இலங்கை அணியின் புதிய பயிற்ச்சியாளராக ருமேஷ் ரெட்நாயக்-கை நியமனம் செய்தது. சன்டிகா அதூர்ஷின்ஹா 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு பயிற்ச்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டது சார்பாக அணி நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
அதில் " நாங்கள் ருமேஷ் ரெட்நாயக்கை இலங்கை அணிக்கு புதிய பயிற்ச்சியாளராக நியமித்துள்ளோம். இந்த முடிவானது எங்களுக்குள்ளாக மறைமுகமாக எடுக்கப்பட்டது. இது சிறந்த முடிவாக இருக்கும் என நம்புகிறோம். சில முடிவுகள் மறைமுகமாக எடுக்கப்படுவதே சிறந்தது. எங்களின் இந்த முடிவுனது முழுக்க முழுக்க இலங்கை அணியின் தரத்தை உயர்த்துவதற்கே."
" எங்களது கையில் அதிகாரம் வரும் போது மிகவும் குறைவான நேரமே எங்களிடம் இருந்தது. அதாவது அடுத்த இரண்டு மாதங்களில் உலககோப்பை நெருங்கியது. அதனால் எங்களால் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவர முடியவில்லை."
" அப்போதே நாங்கள் பயிற்ச்சியாளரை மாற்ற நினைத்தோம். ஆனால் உலககோப்பை நெருங்கியதால் எங்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. " என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு புதிய பயிற்ச்சியாளராக ருமேஷ் ரெட்நாயக் நியமிக்கப்பட்டதற்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. ஆனால் அதே வேளையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள முன்னாள் பயிற்சியாளரான சன்டிகா ஹதுர்க்ஷின்ஹா ," எனது பயிற்சியாளராக இருக்கும் ஆண்டுக்காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் என்னை பதவியிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. அணி நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில் இது குறித்து விரிவாக எதுவும் கூறப்படவில்லை" என தெரிவித்தார்.