இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை பற்றி குறை கூற யாருக்கும் தகுதி இல்லை என்று ரவி சாஸ்திரி ஆவேசமாக கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்தியா என்றாலே முதலில் ஞாபகத்தில் வருபவர் தோனி தான். அதற்கு முக்கிய காரணம் அவர் இந்திய அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி வெற்றி பெறச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் தோனி மட்டும் தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை கொண்ட கேப்டன் இவர்தான். இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஆனால் கடந்த ஆண்டு ஒரு அரைசதம் கூட இவரால் அடிக்க முடியவில்லை.
இந்த வருடம் மே மாதத்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ள இந்த உலகக் கோப்பை தொடர்பாக அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2018-ம் வருடத்தில் விளையாடிய எந்த போட்டியிலும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. எனவே தோனி பலரது விமர்சனங்களுக்கு உள்ளானார். தோனி அணியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் சென்று விளையாடி பயிற்சி எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுரை கூறினார் குறிப்பிடத்தக்கது.
இந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பலரது விமர்சனங்களையும் தாண்டி இந்த ஒருநாள் தொடரில் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் தோனி 3 ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் விளாசி புதிய சாதனையை படைத்தார். மேலும் அந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இவ்வாறு பலரது விமர்சனங்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார் தோனி. அது மட்டுமின்றி இந்திய அணியில் நான்காவது பேட்டிங் வரிசையில் யார் இறங்குவது என்ற குறையையும் தீர்த்து வைத்துள்ளார். இவ்வாறு இந்த 2019 ஆம் வருடத்தில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தோனி.
தோனியை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி கூறியது என்னவென்றால், தோனியை பற்றி குறை கூற யாருக்கும் தகுதி இல்லை. அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?? இல்லை கிரிக்கெட்டைப் பற்றி ஏதாவது தெரியுமா ?? அவர் சச்சின்,கபில்தேவ் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு இணையானவர். இது போன்ற வீரர்கள் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அணிக்கு கிடைப்பார்கள். தோனி தான் இந்திய கிரிக்கெட் அணியின் தூண். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் - 1 அணியாக இருந்த பொழுது கேப்டனாக இருந்தவர் தோனி தான். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு தனது தலைமையில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற தந்துள்ளார். எனவே அவரைப் பற்றி குறை சொல்வதற்கு முன் அவரைப் பற்றி சற்று சிந்தித்துப் பேசுங்கள். இவ்வாறு கூறியுள்ளார் ரவி சாஸ்திரி