இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. கடைசி நாளான இன்று மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை. எனவே இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதன்மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-1 என வென்றது. கடந்த 71 வருடங்களில் ஆசியாவிலிருந்து ஒரு அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த நாள் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெருமைக்குரிய ஒரு நாளாக விராட் கோலி கருதுவதாக கூறினார். இந்த தொடரில் மூன்று சதங்களை அடித்த புஜாரா தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை தவிர தான் சென்ற அனைத்து நாடுகளிலும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பிறகு அணி கேப்டன் மற்றும் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ரவிசாஸ்திரி கூறியதாவது.
"எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான ஒரு தொடர் இதுவாகும். இது 1983 உலகக் கோப்பையை மற்றும் 1985 இல் நடைபெற்ற வேல்ட் சீரிஸ் வெற்றியை விட பெரிய வெற்றியாகும். ஏனெனில் இது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி தான் மிகவும் கடினமான போட்டி, ஆதலால் இந்த தொடர் வெற்றியானது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறந்த வெற்றியாக கருதுகிறேன்"
மேலும் அவர் கூறியதாவது
"கடந்த காலம் ஒரு வரலாறு, இந்த காலம் நம் கையில் இல்லை. இன்று 21 வருடங்கள் கழித்து நாம் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றுள்ளோம் எனவே இந்த தருணத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எனது பாராட்டுக்கள் "
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தோற்றாலும், எல்லா டெஸ்ட் போட்டியும் வெல்லவேண்டும் என்ற ஒரு நெருப்பு உள்ளே எரிந்து கொண்டே இருந்தது.
மேலும் ரவி சாஸ்திரி கூறியதாவது
"இந்த வெற்றி தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கவில்லை 12 மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்காவில் நாங்கள் கூறியதைப்போல் இந்தப் புதிய இந்திய அணி விளையாட்டை மேம்படுத்த கிடைக்கும், ஒவ்வொரு நேரத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டும். இங்கிலாந்திலும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். நாங்கள் நிறைய தவறு செய்தோம் அதனைப் திருத்தி கொண்டு எங்களை இன்னும் சிறப்பாக விளையாட அதை உதவி செய்தது. மிகவும் திருப்திகரமான ஒரு விஷயம் என்னவென்றால் வெற்றி இந்த அணியின் 12 மாத உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும்"
இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இரு அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரிலும் களமிறங்கும். டெஸ்ட் போட்டியின் மூலம் கிடைத்த உத்வேகத்தால் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமான வாய்ப்புள்ளது.