கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக பங்கேற்க உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்

Ravichandran Ashwin Set To Play For Nottinghamshire
Ravichandran Ashwin Set To Play For Nottinghamshire

இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுண்டி சேம்பியன் ஷீப்பில் நாட்டிங்காம்ஷைர் அணியில் விளையாட உள்ளார். எதிர்வரும் டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் இந்திய அணி தனது முதல் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கு தக்க பயிற்சி ஆட்டமாக அஸ்வினுக்கு இது அமையும். இந்திய அணி உலகக் கோப்பை முடிந்த பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இந்திய அணியின் ஓடிஐ/டி20 அணிகளிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அதனால் உலகக் கோப்பையில் அஸ்வினை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை.

அஸ்வின் கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பௌலிங்கை மேம்படுத்தியுள்ளார். மே, ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெறவுள்ள கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பது மே 20 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது பௌலிங்கை அஸ்வின் மேன்மேலும் மெருகெற்ற ஏதுவாக இருக்கும்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரிகள் பத்திரிகைக்கு தெரிவித்தவதாவது,

இவ்வருட கவுண்டி சீசனில் அஸ்வின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக பங்கேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு கவுண்டி அணி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தால் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி உண்டு என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆஸ்வின் கவுண்டி விளையாட முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ நிர்வாக இயக்குனர் மட்டும் ஆட்சேபனை சான்றிதழில் கையொப்பமிட்டால் அவர் இங்கிலாந்து சென்று விடுவார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜின்க்யா ரகானே ஏற்கனவே ஹாம்ஷைர் அணியில் விளையாட இங்கிலாந்து சென்று விட்டார்.கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ஷைர் அணிக்காக பங்கேற்கும் முதல் இந்திய வீரர் ரகானே என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினைப் போலவே ரகானேவும் ஓடிஐ/டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஸ்வின் 6 போட்டிகளில் பங்கேற்க உள்ளார். முதல் மண்டல கவுண்டி சேம்பியன் ஷீப்பில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக இங்கிலாந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடுடன் இனைந்து விளையாட உள்ளார்.

அஸ்வினுக்கு இது இரண்டாவது கவுண்டி கிரிக்கெட் சீசனாகும். 2017ல் வோர்ஷட்ஷைர் அணிக்காக பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஸ்வின் 4 போட்டிகளில் பங்கேற்று 20 விக்கெட்டுகள் மற்றும் 214 ரன்களை குவித்தார். அஸ்வின் மற்றும் ரகானேவை தவிர புஜாராவும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் யார்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். இஷாந்த சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் வாய்ப்பளிக்கப் பட்டால் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

மற்ற இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களான பிரித்வி ஷா, ஹனுமா விகாரி மற்றும் மயான்க் அகர்வால் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய-ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் இவர்களையும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வைக்க முதலில் முடிவு செய்திருந்தது.

Quick Links