இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் அம்பாதி ராயுடு, பகுதி நேரமாக பந்து வீசகூடியவர், ஆனால் சற்று முன் அம்பாதி ராய்டுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடையை அறிவித்துள்ளது ஐசிசி.
இது பற்றி விசாரித்த போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார். போட்டியின் முடிவிலேயே அவர் பந்து வீச்சு மீது சந்தேகங்கள் எழுந்தன. அவர் விதிமுறையை மீறி பந்து வீசுவதாக புகார் எழுந்தது. பந்து வீசுபவரின் கை 15 டிகிரிக்கு மேல் மடங்க கூடாது என்பது விதி, அவ்வாறு மடக்கினால் அது முறையற்ற பந்து வீச்சு, அம்பாதி ராயுடுவின் கை பந்து வீசும் போது 15 டிகிரிக்கும் மேல் மடக்குவதாக புகார் எழுந்தது. ஐசிசியின் கவனத்திற்கு சென்ற இந்த சர்ச்சை, அவருக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தது. இந்த 14 நாட்களுக்குள் அவர் தனது பந்துவீச்சை திருத்தி சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என வலியுறுத்தியது.
ஆனால் இது வரை அம்பாதி ராயுடு எந்த வித சோதனையும் மேற்கொள்ள வில்லை, ஐசிசி வலியுறுத்தி 14 நாட்கள் முடிந்த நிலையில் இப்பொது அவருக்கு இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்து வீச இடைக்கால தடை விதித்து அறிக்கை வெளியுட்டள்ளது. இனி அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச கூடாது, முதல் தர போட்டிகளில் பந்து வீச எவ்வித தடையும் இல்லை. பிசிசிஐ நடத்தும் உள்ளுர் போட்டிகளில் பந்து வீச எந்த தடையும் இல்லை.
இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது, இந்த அணியிலும் இடம்பெற்றுள்ளார் அம்பாதி ராயுடு. இத்தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன . இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பற்றது. இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இது வரை ஒரு ஓவர் கூட வீசாத இவர் இனியும் பந்து வீச முடியாது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டியை ஆடியது, இந்த ஆட்டத்தில் கேப்டன் கூல் தோனிக்கு ஓய்வு அளிக்கபட்டது, அவருக்கு மாற்றாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக அறிவிக்கபட்டார். சர்ச்சையில் சிக்கி திரும்பிய ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்றுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 244 ரன் அடித்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் இலக்கை அடைந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது, அத்துடன் இந்த தொடரையும் கைப்பற்றியது. ரோகித் சர்மா 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த கோலியும் அரைசதம் கடந்து 60 ரன்களுக்கு வெளியேற தினேஷ் கார்த்தியும் அம்பாதியும் சேர்ந்து பினிஷ் செய்தனர். அம்பாதி ராயுடு 40 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அம்பாதி ராயுடு தடை செய்யபட்ட செய்தி வந்த போது அவர் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.