2008 முதல் துவங்கி இந்தாண்டு வரை ஐபிஎல் போட்டிகள் வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் என முக்கிய நகரங்களில் தலைமையில் அணிகள் களமிறங்குகின்றன. இதில் பல்வேறு சாதனைகளை ஒவ்வொரு அணியும் படைத்து வருகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஒரு சில சாதனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.
#) ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ரன் குவித்த அணி ( 263 )
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 11 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. ஆனால் ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வென்றதில்லை. கோப்பையை வேண்டுமானால் கைப்பற்றாமல் இருக்கலாம். ஆனால் வேறு எந்தவொரு அணியாலும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளது பெங்களூர் அணி. அதில் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படைத்துள்ளது. புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. அதே போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையையும் அந்த அணியின் வீரர் கிறிஸ் கெயில் பெற்றார். அந்த போட்டியில் அவர் 175 ரன்கள் குவித்தார். இன்றளவும் இந்த இரண்டு சாதனைகளையும் எந்த அணியாலும் முறியடிக்கவே முடியாததாக உள்ளது.
#) ஐபிஎல் போட்டியில் குறைந்தபட்ச ரன்கள் குவித்த அணி ( 49 )
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி ஏன்ற சாதனைக்கு சொந்தமான பெங்களூர் அணி அதே ஐபிஎல் போட்டியில் குறைந்தபட்ச ரன்கள் குவித்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கெதிராக போட்டியில் பெங்களூர் அணி 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த போட்டியில் பெங்களூர் அணி வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னே 9 தான். அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலே ஆட்டமிழந்தனர். இது ஐபிஎல் போட்டியில் மோசமான சாதனைகளுள் ஒற்றாகக் கருதப்படுகிறது.
#) குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் கிறிஸ் கெயில் ( 30 பந்துகள் ) பெங்களூர்
பெங்களூர்அணி அதிகபட்ச ரன்னான 263 ரன்கள் குவித்த அதே போட்டியில் தான் அந்த அணியின் வீரர் கிறிஸ் கெயில் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளிலேயே அதிரடியாக சதமடித்தார். இது இன்றளவும் ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகக் கருதப்படுகிறது.
#) அதிக பந்துகளில் சதமடித்த வீரர் - மனீஷ் பாண்டே ( 67 பந்துகள் ) பெங்களூர்
2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வீரர் மனீஷ் பாண்டே டெக்கான் சார்ஜஸ் அணிக்கெதிராக போட்டியில் 67 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் இவர் அதிக பந்துகளில் சதமடித்த வீரர்என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப் பறித்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 65 பந்துகளில் சதமடித்ததே அதிக பந்துகளில் சதமடித்ததாக இருந்தது