2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லீக் சுற்றுடனே மீண்டும் நடையை கட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அணித்தேர்வு மற்றும் அவர்களின் மோசமான ஆட்டத்திறனை வைத்து சில பேர் அதிகம் நகைத்துள்ளனர்.
அந்த அணியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷீம்ரன் ஹட்மைரின் மோசமான ஆட்டத்திறனை கண்டு பெங்களூரு அணி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த இளம் வீரர் ஹட்மைர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை ஹட்மைர் சரியாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால் தற்போது அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணக்காக ஹட்மைர் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
2019 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக ஹட்மைரின் ஆட்டத்திறன் மோசமாக இருந்தாலும் பெங்களூரு அணி நிர்வாகம் அவரை அடுத்த வருட ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்க கூடாது. 2019 ஐபிஎல் ஏலத்தில் ஹட்மைருக்கு அதிக போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சில போட்டிகளில் அவரது ஆட்டத்திறனை வைத்து ஹட்மைரை மதிப்பிடக் கூடாது. இந்த நிலையில் தான் அந்த அணி அவருக்கு முழு ஆதரவை அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் பெங்களூரு அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளில் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அதிக வீரர்களை நாம் ஐபிஎல் தொடர்களில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
கே.எல்.ராகுல், சஃப்ரஸ் கான், தினேஷ் கார்த்திக், கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் ஆகியோர் இதற்கு தகுந்த உதாரமாக இருப்பர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் பெங்களூரு அணிக்காக விளையாடியவர்கள் தான். இந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்கள் தற்போது வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றபோது ஷீம்ரன் ஹட்மைர் அந்த அணியில் இடம் பெற்று சிறப்பான அதிரடியை வெளிபடுத்தி வந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போது மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
ஹட்மைர் ஒரு இளம் வீரர் என்பதால் தனது தவறை சரியாக புரிந்து கொண்டு திருத்தி கொண்டு அதிரடியை வெளிபடுத்துவார். இதனை பெங்களூரு அணி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர் ஷீம்ரன் ஹட்மைர். தட்டை மைதானமான சின்னசாமி ஸ்டேடியம் இவருக்கு சிறப்பாக ஆதரவு அளித்தது. அடுத்த ஐபிஎல் தொடரிலும் இவர் பெங்களூரு அணியில் தக்க வைக்கப்பட்டால் எதிர்காலத்திலும் இந்த மைதானம் ஹட்மைருக்கு தகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரெயஸ் ஐயர் 2016 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் அணி அவருக்கு அடுத்தடுத்த சீசனில் வாய்ப்புகளை அளித்து தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. அத்துடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸை பிளே ஆஃப் சுற்றுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
கனே வில்லியம்சனிற்கு முதல் இரு ஐபிஎல் தொடர் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் 2018 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பெங்களூரு அணியில் தவறுகள் பல நடந்திருந்தாலும் அதனை சரியாக திருத்திக் கொள்வதில் வல்லவர்கள். எனவே 2020 ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ஷீம்ரன் ஹட்மைரை பெங்களூரு அணி அணியிலிருந்து விடுவிக்க கூடாது.