நடந்தது என்ன?
சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஏப்ரல் 21 அன்று மோதிய போட்டியில் அம்பாத்தி ராயுடுவின் 3D டிவிட் பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வசைபாட பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா
இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாந்த் தலைமையிலான குழு ஏப்ரல் 15 அன்று 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை அறிவித்தது. இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக வலம் வந்த அம்பாத்தி ராயுடு மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைக்காக இந்திய அணி அறிவித்த 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாந்த் ராயுடுவின் விலக்கு பற்றி கூறியதாவது, "ராயுடுவை விட விஜய் சங்கரை உலகக் கோப்பை அணியில் இடம்பெற செய்ததற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று அவரது 3 விதமான தனித்திறமை திறனே ஆகும். தான் உலகக்கோப்பை அணியில் நீக்கப்பட்டதற்காக டிவிட்டரில் அவர் வசைபாடியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ராயுடு டிவிட் உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
ராயுடுவின் டிவிட்டரில் வெளியிட்ட அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:
ராயுடுவின் டிவிட்டை நாங்கள் கவணித்தோம். தற்போது அவருக்கு இருக்கும் இந்த உணர்வுகளை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். அவருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம் தான். ஆனால் அதனை அவர் டிவிட்டரில் இவ்வாறு வெளிபடுத்தியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ராயுடுவிற்கு ஏற்பட்டுள்ள இந்த ஏமாற்றம் நீங்க சில நாட்களாகும். அதை நாங்கள் பொறுத்து கொள்கிறோம். இதனால் அவர் மீது எங்களுக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. உலகக் கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்களுள் ராயுடுவும் ஒருவரே. 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியில் எவரேனும் காயம் காரணமாக விலகினால் ராயுடுவிற்கு வாய்ப்பு கிடைக்கும்".
கதைக்கரு
ஏப்ரல் 21 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ராயுடு வசைபாடப்பட்டார். பெங்களூரு அணியின் இந்த டிவிட் நோக்கம் ஜடேஜா வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராயுடுவின் அற்புதமான ஃபீல்டிங் திறனே காரணமாகும்.
அந்த பந்தில் பார்தீவ் படேல் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ராயுடு மைதானத்தின் வலப்புற மையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பார்தீவ் படேலால் அடிக்கப்பட்ட பந்து ராயுடுவிடம் செல்ல, அவர் பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் படும்படி அடித்தார். எதிர்பாரத விதமாக நான்-ஸ்ட்ரைக்கில் அக்ஸிப் நாத் கிரிஸில் நன்றாகவே நின்று கொட்டிருந்தார். ராயுடுவின் இந்த ஃபில்டிங் திறன் பற்றி பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வசைபாடியுள்ளது.
அடுத்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தனது சொந்த மண்ணில் சந்திக்கிறது. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் அடுத்த போட்டியில் சந்திக்க இருக்கிறது..