இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று சூப்பர் சன்டேவில் இரண்டாவது போட்டியான இந்த தொடரின் 39வது லீக் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் பார்த்திவ் படேல். கேப்டன் கோலி 9 ரன்னில் தீப்க சஹார் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் நிலைத்து விளையாடிய நிலையில் 25 ரன்னில் ரவிந்திர ஜடேஜா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த அக்ஷிதீப் நாத் அதிரடியாக விளையாடினார். 24 ரன்னில் நாத் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ஸ்டோனிஸ் 14 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார்.
இந்த விக்கெட்டை பாப் டு பிளஸிஸ் மற்றும் ஷோரி இருவரும் சிக்ஸர் லையலின் சிறப்பான முறையில் கேட்ச் பிடித்தனர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய பார்த்திவ் படேல் 53 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மோயின் அலி மட்டும் 5 பவுண்டரிகள் வீளாசி 26 ரன்னில் பிராவோ ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதை அடுத்து பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களை அடித்தது. சென்னை அணியில் இம்ரான் தாஹிர் -1, பிராவோ -2, ஜடேஜா -2, தீபக் சஹார் -2 விக்கெட்கள் விழ்த்தினர்.
அதன் பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். வாட்சன் வழக்கம் போல் முதல் ஓவரில் 5 ரன்னில் ஸ்டைன் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ரெய்னா அடுத்த பந்திலேயே கோல்டன் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பாப் டு பிளஸிஸ் 5 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்து வந்த கேதார் ஜதாவ் 9 ரன்னில் அதே உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆக சென்னை அணி 28-4 என்ற நிலையில் தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ராய்டு இருவரும் நிலைத்து விளையாடிய நிலையில் ராய்டு 29 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ஜடேஜா 11 ரன்னில் ரன்அவுட் ஆக தோனி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி 4,6,6,2,6 ரன்கள் அடித்து அசத்தினார் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைபட்ட நிலையில் தோனி ரன் ஒடிய போது மறுமுனையில் தாக்கூர் ரன்அவுட் ஆக பெங்களுரு அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.